பக்கம்:தரும தீபிகை 6.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21:44 த ரும பிே கை வீழ்ந்து தடித்தது. எல்லாரும் ஐயகோ! என்று அலறி அழு கரர். பின்பு நடந்த வரலாறுகளை யெல்லாம் நன்கு தெரிந்து நாடும் நகரமும் வருந்தி நொந்தன. என்ன நீதி என்ன நெறி என்ன கருமம்' என மாதவரும் மறுபுலங்களின் மன்னவரும் வியந்து புகழ்ந்தனர். இழந்து போன கை தெய்வத்திருவருளால் பொன் கையாய் வளர்ந்து விளங்கியது. அதனல் பொற்கைப் பாண்டியன் எனப் புகழ் பெற்று கின்ருன். இக்க அதிசய சரித் திரத்தை மதுரையின் அதி தேவதை கண்ணகியிடம் துதிசெய்து சொல்லி அரசைப் புகழ்ந்துள்ளது. அயலே வருவது காண்க. உதவா வாழ்க்கைக் கீரந்தை மனேவி புதவக் கதவம் புடைத்தனன் ஒர்நாள் அரச வேலி அல்லது யாவதும் புரைதிர் வேலி இல்லென மொழிந்து மன்றத் திருத்திச் சென்றீர் அவ்வழி இன்றவ் வேலி காவாதோ? எனச் செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று வச்சிரத் தடக்கை அமரர் கோமான் உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தண்க குறிைத்த செங்கோற் குறையாக் கொற்றத்து இறைக்குடிப் பிறந்தோர்.' (சிலப்பதிகாரம்.23) கோமுறை கோடாக் கொற்றவர் ஏறே முறை யேயோ தாமரை யாள்வாழ் தண்கடி மார்பா முறை யேயோ மாமதி வானேன் வழிவரு மைந்தா முறையேயோ தீமைசெய்தாய்போல்செங்கைகுறைத்தாய்முறையேயோ? . - (திருவிளேயாடல்) எனக்குத் தகவன் ருல் என்பதே நோக்கித் தனக்குக் கரியாவான் தாய்ைத் தவற்றை கினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் கானா _ எனச்செய்யார் மாணு வினே. * (பழமொழி 102) ஆதிச் செழியற்கு ஒருகைம் மலர் பொன் - - அடைய. (தக்கயாகப்பரணி) o நாடுவிளங்கு ஒண்புகழ் நடுதல் வேண்டித்தன் ஆடுமழைத் தடக்கை அஆறுத்துமுறை செய்த பொற்கை கறுந்தார்ப் புனகார்ப் பாண்டியன். (குணநாற்பது) - * - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/321&oldid=1327718" இலிருந்து மீள்விக்கப்பட்டது