பக்கம்:தரும தீபிகை 6.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 83. நீ தி 2149 யாண்டும் ஒளி மிகுந்து உயர்ந்து நீண்டு விளங்குகின்ருன். “The noblest motive is the public good” (Steele) பொதுசன கன்மையே அரசனுக்கு உயர்தர நோக்கமாம் என்னும் இது இங்கே உணரத்தக்கது. பிறர்கலமுற எண்ணி வருகின்றவன் பெரிய புண்ணிய மன்னனுப் கண்ணிை வருகிருன்.

*

828. நல்ல பயிருள் நவையா யிடைதுழைந்த பொல்லாக் களைகளைப் போக்கியே-வல்லோன் புலம்புரந்து போற்றல்போல் போக்தமுடி வேந்தன் நிலம்புரங்து போற்றும் கிலேத்து. (-on) இ-ள் நல்ல பயிர்கள் இடையே நுழைக்த பொல்லாத களைகளை அகழ்ந்த நீக்கி விளே புலத்தை இனிது பேணி வரும் உழவன் போலத் தீயோரை அழித்த ஒழித்து எல்லோரை ப் போற்றி உலகத்தை அரசன் யாண்டும் நன்கு ւյց ந்து வருவன் என்க. நெல் முதலிய நல்ல உணவுப் பொருள்களை உளவாக்கி நாட்டுக்கு நலம் பல புரிந்து தனது குடித்தனத்தை இனிதுபேணி வருபவன் உழவன் என கின்ருன். அவனுடைய உழைப்பு உறுதி ஊக்கம் காப்பு முதலிய நிலைகளைக் கருதி நோக்கி அரசன் உலகத்தைப் பேண வேண்டும் என்ற த இருவகை இனங்களை யும் ஒருங்கே கூர்ந்து ஒர்ந்து உண்மை காண வந்தது. பூமிபாலகன் என்பது அரசனுக்கு ஒரு பெயர். அது உழவ னுக்கும் உரிமையாய் அமைந்தத. உழவன் இல்லையானல் பூமி பாலைவனம் போல் பாழ்பட்டுப் போம். அகனே உழுது பண் படுத்தி அரிய பல வளங்களை விளைத்து உயிரினங்கள் யாவும் உரிமைத் தாய் என்று உவந்து போற்றப் பூமிதேவி என்னும் அருமைப் பேரோடு பெருமையாய் விளங்கச் செய்தவன் உழ வனே ஆதலால் அவனது விழுமிய கிலே தெளிவாய் கின்றது. நிலத்தின் கிழவன் என உழவன் உரிமை பூண்டுள்ளதும் ஈண்டு உணர வுரியது. அவன் வளம் செய்ய வையம் கலம் செய்கிறது. புல்லும் நெல்லும் விளைந்து வருகிற புன்செயும் கன்செயும் புலம் என வந்தன. புலம் புரந்து வருகிற எர் உழவன் கிலம்புரந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/326&oldid=1327723" இலிருந்து மீள்விக்கப்பட்டது