பக்கம்:தரும தீபிகை 6.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. நீ தி 2153 உரிமையான கடமையாம். அத்தகைய மக்கள் வாழுகின்ற நாடே தக்க பான்மைகள் சுரங்து மிக்க மேன்மைகள் அடையும். இழிநிலைகள் யாண்டும் புகாமல் உயர்குணநிலைகளே எவ் வழியும் பரவி வரும்படி அரசன் பேணிவரின் அந்த ஆட்சி திவ் வியமாட்சியாய்ச் சிறந்து விளங்கும். மனித சமுதாயத்தை ஆள நேர்ந்தவன் முதலில் தன் பொறிகளை அடக்கி ஆளவேண் டும். புலன்களை அடக்கிப் புனித நெறியில் ஒழுகிவருபவனிடம் விமமிய மேன்மைகள் எவ்வழியும் பெருகி வருகின்றன. தன்னுடைய ஆட்சிக்கும் மாட்சிக்கும் தாழ்ச்சி தருவது எதையும் மன்னன் காட்சியிலும் காணலாகாது. கருமங்கள் யாவும் தரும நீதிகள் தோய்ந்து வர வாழ்ந்து வருபவனே விழு மிய வேந்தனப் விளங்கி யாண்டும் உயர்த்து வருகிருன் " சினனே, காமம் கழிகண் னேட்டம் அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை தெறல் கடு மையொடு பிறவும் இவ் வுலகத் து அறந்தெரி திகிரிக்கு வழியடை ஆகும் தீதுசேண் இகங்கு நன்றுமிகப் புரிந்து கடலும் கானமும் பல பயம் உதவப் பிறர்பிறர் கலியாது வேற்றுப்பொருள் வெஃகாது மையில் அறிவினர் செவ்விதின் கடந்துதம் அமர்துணேப் பிரியாது பாத்துண்டு மாக்கள் மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய ஊழி உய்த்த உரவோர் உம்பல்! " (பதிற்றுப்பத்து, 22) சேர மன்னனுடைய குணநலங்களையும் பரிபாலன நிலை களையும் இது உரைத் துள்ளது. தரும சக்கரமான நீதிமுறைக் குக்கடைகளாயுள்ளவைகளை இதில் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத்தக்கது. கண்ணுேட்டம் = இரக்கம், தாட்சணியம். இது நல்ல குணமே ஆயினும் பொல்லாதவர்களிடம் இக. ஃனக்காட்டலாகாது; அவரைக் கடுமையாப்த் தண்டித்து ஒழிக்க வேண்டும்; அங்கனம் ஒழிக்காமல் இத்தண்ணளியை மன். னன் மருவி கின்ருல் நீதிமுறை நிலைகுலைந்து போம்; ஆதலால் கழிகண் ஒேட்டம் அறம்தெரி திகிரிக்கு வழியடை- «ат үгэлг வந்தது, 270

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/330&oldid=1327727" இலிருந்து மீள்விக்கப்பட்டது