பக்கம்:தரும தீபிகை 6.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. நீ தி 215.5 தன் நாட்டு மக்கள் நல்லவர்களாய் உயர்ந்து வாழ வேண்டு மாளுல் முதலில் அரசன் நல்லவனப்க் திருந்தி ஆளவேண்டும். கலைமையான சிறந்த பதவியை அடைந்தவன் தனது கிலேமையை உணர்ந்து எவ் வழியும் செவ்வியய்ை நீதி முறைகளைச் செய்து வரின் ஆதியிறைவன் அருளையடைந்து மேலும் திவ்விய கதிகளை எ ப்தி மகிழ்கின்ருன். இறைமுறை புரிந்த இன்பம் பெறுக. ==== i ==== - 830. திே சிறிது நிலைதவறின் அவ்வரசு பாதி அழிந்து படுதுயராம்-திே திரியாது கின்றுவரும் சீரின் அளவே மரியாதை யாகும் மதி. (ώ) இ-ள் நீதிமுறை சிறிது தவறினும் அங்க அரசு பாதிக்குமேல் அழிந்து படுதுயரங்களை அடையும்; நீதி வழுவாமல் கின்று வரும் அளவே அரசு விழுமிய நிலையில் விளங்கி எவ்வழியும் உயர்ந்து மரியாதை மாண்புகளை அடைந்து வரும் என்க. உலகத்தை ஆளும் அரசபதவி அரியபெரிய மகிமையுடைது. தெய்வீகம் தோய்ந்தது. மிகுந்த பொறுப்பு வாய்ந்தது. மனித சமுதாயத்தை நெறியே நடத்த சேர்க்கவன் ஆதலால் முதலில் கான் புனிதமாய் கடக்க வேண்டியது அரசனுக்குக் கலைமை யான கடமையாய் அமைந்தது. உரிய ஒழுக்கம் அரிய விழுப்ப மாகிறது; ஆகவே அவ்வேக்கன் மேலான நீதிமானப் கெடித நிலைத்து ஞாலம் முழுவதையும் வழிமுறையே ஆள சேருகிருன். கரும நீதியே அரசை மருமமாய் நடத்தியருளுகிறது. உட லுக்கு உறுதி குருதி, அரசுக்கு உறுதி நீதி என்பது ஆதிமனு மொழி. இரத்த ஒட்டம் சரியாகவும் ஒழுங்காகவும் இருந்தால் தேகம் சுக மாகவும் பலமாகவும் இருக்கும்; அது பழுகாய்ச் சீர் குலைக் கால் கேகம் பிழையாய்ப் பீழையுறும். உயிர் வாழ்வு செங்ரோல் இயங் கிவருகல் போல் அரசவாழ்வு செங்கோலால் நடந்து வருகிறது. கோல் கோடாத வரையும் அரசு வாடாத வளமையாய் வளர்க்க வரும்; அது கோடின் யாவும் அவலமாய் அழிந்தே போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/332&oldid=1327729" இலிருந்து மீள்விக்கப்பட்டது