பக்கம்:தரும தீபிகை 6.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2156 தா ம தி பி ைக ஆகி.பகவன் அருள் நீதி வழியே வருதலால் அதனையுடைய அரசன் அதிசய நிலையில் ஒளிவீசி மிளிர்கிருன் நீதியுடையா னிடம் அரிய பல குணநீர்மைகள் நேரே உரிமையாய் வருகின்றன. ஆதி மதியும் அருளும் அறனும் அமைவும் ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண்ணில் யாவும் நீதி கிலேயும் இவை நேமியி னேர்க்கு கின்ற பாதி முழுதும் இவற்கே பணிகேட்ட மன்னே. (இராமா, அரசியல் 2) தசரத மன்னனிடம் மருவியிருந்த குணநலங்களே இது குறிக் துள்ளது. பொருள் தயங்களைக் கருதி யுனா வேண்டும். மன்னர் பெரும! இன்று என்ன பணிசெய்ய வேண்டும்?' என கீதி முகவியன இந்த அரசனிடம் எவல் கேட்கும் என்றகளுல் இவனது பரிபாலன முறை அறியலாகும். இவ்வளவு நீதிமான் கைகேசியிடம் அளவு கடந்த காதல் கொண்டமையால் இது அடைய சேர்க்கான்; ஆயினும் சொன்ன மொழி மாருமல் இன் அனுயிரை ஈந்து எவ்வுலகும் புகழ இசை மிகப்பெற்ருன். திே முறை அரசனுக்கு உயிர்; அதனே எவ்வழியும் செவ்வை யாக அவன் பேணி வரவேண்டும். நாட்டு மக்கள் சுகமாய் வாழ்வது அரசன் நடத்தும் நீதி நெறியால் ஆதலால் அதனை உரிமையோடு கருதிச்செய்வது அரிய பெரிய கருமமாய் வந்தது. “One hour in the execution of justice is worth seventy years of prayer.” (Justice) நீதி முறை செலுத்துவதிலுள்ள ஒருமணி நேரம் கடவுளைத் துதிக்கின்ற எழுபது வருடங்களுக்குச் சமம் என்னும் இது இங்கே அறிய வுரியது. மனித சமுதாயத்துக்குத் தினையளவு இகம் செய்தாலும் அது கடவுளுக்குப் பனை அளவு பூசனை செய்வதினும் மேலாம் என்பதை இது சால்பாக உணர்த்தி யுள்ளது. இராச நீதியை எவ்வழியும் செவ்வையாகச் செய்து வருவோர் திவ்விய மகிமையை அடைகின்ருர். பாரபட்சம் பாாமல் கியாய முறையை யாரிடமும் நேர்மையாய்ச் செய் வதே செடிய சீர்மையாம்; அகனல் அரியமேன்மைகள் உளவாம். “Let justice be done though heaven should fall.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/333&oldid=1327730" இலிருந்து மீள்விக்கப்பட்டது