பக்கம்:தரும தீபிகை 6.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. நீ தி Z LO'/ தெய்வம் தவறு செய்தாலும் நீதி தவருமல் செய்யப் படும் என்னும் இது இங்கே அறிய வுரியது. யாராயிருக்காலும் பிழை காணசேர்க்கால் கண்டிப்பதே நீதி மன்னர் சிறப்பாம். தீது களைவதால் நீதி வளர்ந்து நெடிது நிலவுகின்றது. தான் தவறியதாகக் கண்டபோது கன் இன்னுயிர் போன மன்னவனையும் இந்நாடு முன்னம் பெற்றிருக்கது. கோவலனைக் கள்ளன் என்.று வஞ்சித்துக் கொண்டு வந்த கொடிய வளு சகன் சொல்லை சம்பி நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் அவனுக்கு மரணதண்டனை விதித்தான். கண்ணகி நேரே வந்து உண்மையை உரைத்தாள்: ‘'என் கணவன் நல்லவன், கள்வன் அல்லன்” என்.று அக் கற்புடையாள் காட்டவே உண்மை தெளிந்த மன்னன் உள்ளம் பதைத்து உயிர் தடித்து அரியனே யிலிருந்து கீழே வீழ்ந்த உடனே இறந்து போனன். அவன் தேவியும் கூடவே ஆவி நீங்கினுள். மன்னன் மறுகி மாண்டது. பொன்செய் கொல்லன் தன் சொற் கேட்ட யானே அரசன்! யானே கள்வன்; மன்பதை காக்கும் தென்புலம் காவல் என் முதல் பிழைத்தது; கெடுகஎன் ஆயுள் என மன்னவன் மயங்கி விழ்ந்தனனே, தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தன ள் நடுங்கிக் கணவனே இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென் அறு இணையடி தொழுது விழ்ந்தன.ளே மடமொழி. (சிலப்பதிகாரம், 20) கான்செய்தது பிழைஎன்று தெரிக்கவுடன் யானே அரசன்? யானே கள்வன் என்று உள்ளம் துடித்து அலறியிருக்கிருன். துயரம் தாங்கமாட்டாமல் உயிர் நீங்கிப்போயது. நாயகன் பிரிவைச் சகிக்க முடியாமல் கேவியும் உடனே மாண்டாள். இது எவ்வளவு அதிசயம்! எத்தணேப் பரிகா பம்! உய்த்தனர வேண்டும். உத்தம நீதிமான் என்று அரசகுலம் முழுவதும் அதிசயம் மீதுளர்ந்து பரிவோடு இவனைப் பாசியுள்ளது. 'வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் கிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/334&oldid=1327731" இலிருந்து மீள்விக்கப்பட்டது