பக்கம்:தரும தீபிகை 6.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2160 த ரும பிே கை பிறவி எவ்வழியும் துன்பமே ஆதலால் அதனே நீக்கி உய்ய நேர்ந்தவர் ஞானிகள் என நேர்ந்தார். கருப்ப வாசம் முதல் உயிரடையும் துயர நிலைகளை யூக விவேகமாய் உணர்ந்து தெளிங் தவர் ஆதலால் உலகப் பற்றுக்களை யெல்லாம் ஒருங்கே துறந்து பிறவியை நீக்க விரைந்தார். அவ்வாறு யூகமாய் உணராதவர் மோகமாயிழிந்து பாண்டும் கொடிய பிறவித்துயரில் ஆழ்ந்தார். ஊகமில் மூகச்க்கு எல்லாம் ஊழிவெங் கடலாம் சென்மம்; மோகமில் ஊகத் தோர்க்கு முன்னு று கோவின் தாளாம்: சோகமில் ஞானி நெஞ்சில் தொடர்ந்த சிற் றின்பம் பற்ரு: போகமில் சிற்றுார்ப் புன் பெண் பொலிநகர் விடலைக்கு என்ம்ை. (ஞானவா சிட்டம்) யூகமுள்ள ஞானிகள் பிறவியை எளிதே நீங்கிப் பேரின்ப நிலையை அடைகின் ருர், அத்தகைய யூகமில்லாத மூகர்கள் பிறவிக் கடலுள் வீழ்ந்து பெருந்துயருறுகின்ருர் என இது வரைந்து காட்டியுள்ளது. ஞானக் காட்சி நன்கு காணத்தக்கது. உற்றுள்ள நிலைகளை உய்த்துணர்ந்து ஊறுகோாவகை உய்தி பெறுகின்றவன் உயர்ந்த விவேகி ஆகின் ருன்; அவ்வாறு பெரு தவன் அவிவேகியாப் அலமருகின் முன். வாழ்க்கையில் எச்ச ரிக்கையாய் முன் ஏறுகின்றவனே யூகசாலி என்.று உலகம் புகழ் இன்றது; அங்வனம் செல்லாமல் அயர்த்து நிற்பவனே அசடன் என்று எள்ளி இகழ்ந்து அவலமாக் கள்ளி விடுகின்றது. பறவைகளுள் காகம் மிகவும் யூகம் உடையது. குறிப்பைக் கூர்ந்து நோக்குவது. கல்லோ கோலோ இல்லாமல் வெறுங் கையை ஓங்கினல் அது அஞ்சாமல் கிம்கும். 'கையில் ஒன்றும் இல்லை; இந்த மனிதன் நம்மை என்ன செய்ய முடியும்?' என் லும் தணிவு அதனிடம் மன்னி உள்ளதை அதன் வெருவா క&ు தெளிவா விளக்கி ஒருவகை உறுதியை மருமமாக் துலக்கியுளது. வெருவா வாப் வன் காக்கை’ (புறம் 238) எனப் பெருஞ் சித்திரர்ை அதனே இங்ங்னம் சித்திரித்துக் காட்டியுள்ளார். வெரு வுதல் = அஞ்சுகல். அஞ்சாமையும் யூகமும் அதனிடம் உள்ள மையால் யாண்டும் எஞ்சாமல் அது இரை ஆர்க் த செல்கிறது: காக்கை நோக்குமுன் அறியும்; கொக்கு தாக்கியபின்தெரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/337&oldid=1327734" இலிருந்து மீள்விக்கப்பட்டது