பக்கம்:தரும தீபிகை 6.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2162, த ரும தீ பி. கை வகையான அரிய மதிநலம் வாய்ந்து பெரிய செயல்களை ஆற்றிப் பேர்பெற்ற வேந்தன் ஒருவனே இங்கே காண வருகின்ருேம். "எண்ணியல் முற்றி ஈர்.அறிவு புரிந்து சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் காவற்கு அந்ைத அரசு துறை போகிய வி.ஆறுசால் புதல் வற் பெற்றனே இவனர்க்கு அருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப! அன்ன்வை மருண்டனென் அல்லேன் கின்வயின் முழுதுணர்ந்து ஒழுகும் கரைமூ தாளனே வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்கு என வேறுபடு கனந்தலைப் பெயரக் கூறினே பெருமகின் படிமை யானே. (பதிற்றுப்பத்து, 74) சேரமன்னனுடைய சீர்மை நீர்மைகளை இதுகுறித்துள்ளது. இவனது யூக விவேகமும் குண கலங்களும் அறிவு முதிர்க்க மேலோர்க்கும் ஞான ஒளிகாட்டி விழுமிய நிலையில் விளங்கி யிருந்தன; அவ்வுண்மையை இதில் உணர்ந்து கொள்ளுகிருேம். மதியூகம்வாய்ந்து விதிமுறை ஆய்ந்து அதிநயமாய் வினைகள் புரிந்து உயிர்களை ஒம்பிவருகிற அரசன் உயர்கலங்கள் தோய்ந்து எவ்வழியும் புகழ் ஒளி விசிப் பொலிந்து திகழ்கிருன். கூரிய மேதையாய் கின்று காரியம் புரிந்து சீரிய மேன்மைகள் பெறுக. 883 கூர்ந்து குறிப்பறிந்து கோடாமல் காடியே ஒர்ந்து புரிவார் உயருவார்-தேர்ந்துவினை செய்யும் அளவே சிறந்த மகிமைகள் வையம் புகழ வரும். (2-) இ-ஸ். செய்ய நேர்ந்துள்ள வினைகளைக் குறிப்போடு கூ ர் ங் து நேரே ஆராய்ந்து ஒர்க் த உணர்ந்து செய்பவர் உயர்ந்து வரு வார்; தேர்ந்து வினை செய்கின்ற அளவே சிறந்த மகிமைகள் கோப்க்.து உலகம் வியந்து புகழ நிலைமை விளைந்து வரும் என்க. கூரிய அறிவும் குணாலங்களும் அமைந்த அளவு மனிதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/339&oldid=1327736" இலிருந்து மீள்விக்கப்பட்டது