பக்கம்:தரும தீபிகை 6.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2L64 த ரும தீ பி. கை பிறருடைய உள்ளம் கருதியுள்ளதை அவர் வாப் திறந்து சொல்லாமலே அ வ ர து முகக்குறிப்பால் ஒர்க் து உணர்ந்து கொள்பவன் இந்த உலகத்திற்கு ஒர் உயர்ந்த மணியணியாப் எழில் புரிந்து ஒளி மிகுந்துள்ளான் எனத் தேவர் இ ங் எ ன ம் உணர்த்தியுள்ளார். மதியூகத்தின் மாட்சி காட்சிக்கு வந்தது. அறிவின் கூர்மை அளவுதான் மனிதன் சீர்மை மிகுந்து திகழ்கின்ருன். உலக நிலைகளையும் கலைகளையும் பொதுவாகக்கெரி கின்ற அறிவினும் குறிப்பாக ஒர்ந்து கூர்ந்து தேர்ந்து எதையும் யூகமாய் உணரும் விவேகம் மிகவும் உயர்ந்தது. அறிவு விளக்கின் ஒளிபோல் விளங்கி நிற்கிறது. யூகம் கதிரின் ஒளிபோல் வேகமாய்ப் பாப்கிறது. அறிவாளி என்பதை விடயூகி என்பது உயர்தரமுடையது. அறிஞன் செய்ய மு டி யா த அதிசய காரியங்களை யூகி விசய மாய்ச் செய்துவிடுகிருன். எதையும் கூர்ந்து ஒர்ந்து கவனமாய்க் கருதி நோக்குவதால் கருமங்களின் மருமங்களையெல்லாம் தெளி வாக யூகி விரைந்து தெரிந்து கொள்கிருன்; கொள்ளவே எல் லாம் எளிதாப் முடிகிறது. அதிமதி நுட்பம் என யூகம் அதிசய கிலையில் துதிகொண்டு யாண்டும் மகிமை மிகுந்துள்ளது. எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன் ரோமாபுரியிலிருந்த ஒரு பெரிய வரிடம் போய் அறிவுக்கும் விவேகத்துக்கும் என்னவேற் அறுமை? என அறிஞர் சிலர் வினவினர். அதற்கு அந்த யூகி அதி விசயமாய்ப் பதில் கூறியது அயலே வருகிறது. An ounce of discretion is worth more than a pound of knowledge. [Ital] . . ஒரு ராத்தல் அறிவை விட ஒரு அவுன்ஸ் யூகம் அ தி க மகிமையுடையது என அவர் இவ்வாறு உரைத்திருக்கிரு.ர். Discretion of speech is more than eloquence. (Васon) யூகமான ஒருவார்க்கை .ெ பரிய பிரசங்கத்தினும் உயர்க் தது என்னும் இது இங்கே உணர்ந்து கொள்ளவுரியது. சிறந்து முதிர்ந்த அறிவின் சாரமாய் விவேகம் விளைந்து வருதலால் அது உணர்வின் முடிவான எல்லையில் கனியே ஒளிசெய்துகிற்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/341&oldid=1327738" இலிருந்து மீள்விக்கப்பட்டது