பக்கம்:தரும தீபிகை 6.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2166 த ரும தி பி ைக நேர்ந்த கருமங்களைக் கருதியுணர்ந்து உறுதியாகச் செய்து வரு பவரே உயர்ந்த வினையாளராய் ஒளிபெற்று வருகின்ருர். அந்த நிலையில் வந்துள்ள கரும வீரர்களை எங்க அரசன் உரிமையாகத் தேர்ந்து கொள்ளுகின்ருனே அந்த அரச ஆட்சி அரிய பல நிலைகளில் உயர்ந்து பெரிய மாட்சியோடு பெருகி விளங்கும். தக்க துணைகள் அமைந்த அளவே அரசன் மிக்க மேன்மைகளை அடையநேர்கின்ருன். பகுதி தோறும் தகுதியாளரை உறுதியாக நிறுவின் அரசு எவ்வழியும் செவ்வையாய் இனிது இயங்கி நன்கு வி ள ங் கி வரும். தக்கவரைத் த ழு வி க் கொள்வதே மிக்க விவேகமாம். அத்தகைய விவேகி எத்தகைய வினைகளிலும் வெற்றி மிகப் பெற்று யாண்டும் உத்தம வேந்தனப் ஒளிமிகுந்து நிற்கின்ருன். தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன் அறும் இல். (குறள், 462) காரியங்களைக் கருதிச் செய்ய வுரியவர்களைத் தேர்ந்து தெளிந்து, அவரோடு ஒர்ந்து வினை செய்பவர் எதையும் எளிதே முடித்துக் கொள்வர்; அவர்க்கு மு டி யா த் பொருள் யாதும் இ ல்லை எனத் தேவர் இவ்வாறு முடிவு செய்து கூறியுள்ளார். தக்க இனத்தைத் தழுவிக் கொள்ளின் விழிபெற்ற முகம்போல் ஆட்சி எவ்வழியும் மிக்க ஒளி பெற்று விளங்கும். மனமாட்சியும் வினையாட்சியும் ஒருங்கே வாய்ந்துள்ள விக் தகரை உய்த்துணர்ந்து உரிமை செய்து ஆட்சிக் குழுவில் வைத் துக் கொண்டால் அ ங் த அ ர சு சரியாய் இயங்கி நெறியே கடந்து வரும். சிேய காரியக்குழுவால் சிறப்புகள் விளைகின்றன. நல்ல இயல்புகள் கோய்ந்து யாண்டும் கீரமாய்க் கருமங் கள் செய்ய வல்லவரே நாட்டுக்கும் மக்களுக்கும் நலம் புரிய உரியராய்த் துலங்கிவருவர். அத்தகைய தகுதியாளரைத்தமராக மருவிவரின் அரசு மிகுதியான மேன்மைகளை அடைந்து திக ழும். சார்ந்த இனம் சீர்மையுடைய காயின் யாண்டும் ஆர் க் க மகிமை நீண்டு ஆட்சி மாட்சியாய் நிலைத்து நிலவும். நல்ல குடியில் பிறந்தாறு நவையும் மறப்பு மடி பிழைப்பென்.று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/343&oldid=1327740" இலிருந்து மீள்விக்கப்பட்டது