பக்கம்:தரும தீபிகை 6.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 178 த ரு ம தி பி ைக புறப்பகைதான் எவ்வளவும் போக்கலாம் பொல்லா அகப்பகையேல் அந்தோ அழிவாம்-புறத்தமைந்த கண்ணிமை மேல் புண் என் னில் காக்கலாம் கண்ணுள்ளே நண்ணிவிடின் என்னமோ நாடு. புறப்பகையினும் அகப்பகை அழிதயருடையத; க ண் அனுள் துழைந்த புண் போல் எண்ணரிய வேதஆனகளை இழைத்து விடும் என இது உணர்த்தியுள்ளது. இக்க இருவகைப் பகை களோடு இடை மருவியுள்ள உட்பகையையும் ஒர்ந்து விரைந்து கடிய வேண்டும். கடியாது கழிய விடின் குடியை அடியோடு அது கெடுத்துவிடும். கேடு விளையுமுன் நாடிக் களைந்து விடுக. எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு. (குறள், 889) உட்பகை எள் அளவே ஆயினும் அது மலையளவு கேட்டை விளைத்து விடும் என இது குறித்திருக்கிறது. அதனைச் சிறிது என்று எண்ணி ஏமாந்து நில்லாதே; ஒல்லையில் களைந்து ஒழித்து விடு என விழிப்பூட்டி விரைவு படுத்திக் தேவர் இவ்வாறு விளக் கியிருக்கிருர். அழிவுகிலை தெளிவாய் விழிகெரிய நேர்ந்தது. மட்பகை போல் கொய்யும் என்றது உட்பகை செய்யும் அழிவு நிலையை நுட்பமா உணர வந்தது. குயவன் சக்கரத்தின் மீது மண்ணே வைத்துப் பானை வனே கிருன்; அது உருவாகி வரு கிறது; அவ்வாறு வரும் போதே ஒரு துரும்பை அடியில் அனைத்து அகனஅடியோடு துணிக் து விடுவன். உட்பகைவரும் இப்படி உறவுபோல் அணுகி உயிர்க்கேடு செப்துவிடுவர். தாயோடு பிள்ளை கலைக்கூட விடாமல் குடியைக் குலைத்த உட்பகை கொடுங்கேடு விளைத்து விடும் என்பதை உவமைக் குறிப்பால் ஊன்றி நோக்கி உணர்ந்து கொள்கின்ருேம். புறத்தே இனிய உறவு போல் தோன்றி அகத்தே கொடிய இமவு சூழும் இந்த வஞ்சப் பகை ஞ் சி னு ம் கொடியது; காசம் புரிகின்ற இந் நீசத்தை அஞ்சி நீக்குக.

  • = m - == --- == - -- புறம் கட்டு அகம்வேர்ப்பார், நச்சுப் பகைமை

வெளியிட்டு வேருதல் வேண்டும் கழிபெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/355&oldid=1327752" இலிருந்து மீள்விக்கப்பட்டது