பக்கம்:தரும தீபிகை 6.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆ ற் ற ல் 1959 மூண்டு முயன்ற அளவு மனிதன் உயர்ந்து வருகிருன். மானச மருமங்கள் மனித கருமங்களா மருவி நிற்கின்றன. இயல்பும் செயலும் குணமும் குணியுமாப் மனம் புரிந்து வருகின்றன. செய்கின்ற காரியங்கள் சீரிய பலன்களை நேரே விளைத்து வருதலால் வினையாளன் நினையாமலே நிறைந்தி செல்வங்களையும் சிறக்க மேன்மைகளையும் அடைந்து கொள்ளுகிருன். சன் aj மத்தை உரிமையோடு ஒருவன் கருதிச் செய்யும் பொழுது அங் கே கருமதேவகை ஆணே புரிகிறது; புரியவே அரிய பெரிய பல ன்கள் பெருகி வருகின்றன. வரவே மகிமைகள் விரிகின்றன். சோம்பல் வறுமைத் துன்பங்களுக்கு 'உரிமையாயுள்ளது; அகன மருவி நின்றவன் எவ்வழியும் இழிவே அடைவான். மடி மூதேவி, முயற்சி சீதேவி. என்னும் முதுமொழியால் அங்க இரண்டின் நிலைகளையும் நீர்மைகளையும் நன்கு தெரிந்து கொள்ள லாம். படி படியின் முடியும் முடிவாய் முடிந்து போம். முயற்சி எல்லாச் செல்வங்களையும் இனிது அருளுகிறது; உயர்ச்சி நிலைகள் யாவும் அகனல் ஒருங்கே உளவாகின்றன. உள்ளக் கிளர்ச்சியோடு ஊக் இ முயன்றவனை காடி நல்ல மேன் மைகள் எல்லாம் வெள்ளமாய் விரைந்து ஒடி வருகின்றன. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. (குறள், 6.10) சோம்பல் இல்லாக அரசன் உலகம் முழுவதைபும் தனக் கே கனி உரிமையாக ஒருங்கே அடைவான் என இது உணர்த் தியுள்ளது. அடி அளந்தான் என்ற து திருமாலை. அவன் இரண்டு அடியால் அளந்து கொண்ட எல்லா உலகங்களையும் மடி.இல் லாக மன்னன் ஒரே அடியாப் அடைந்து கொள்ளுவன் எனத் தேவர் இவ்வாறு கூறியது அரசன் யாண்டும் அயர்ந்திராமல் எவ்வழியும் செவ்வையா ப் முயன்று வர வேண்டும் চাল-au கருதியேயாம். பலனக் காட்டி கலனே ஊட்டினர். மடி மிடியை விளக்கும்; குடியைக் கெடுக்கும்; அதனை அடியோடு ஒழித்து விடுக; அது ஒன்று ஒழியின் அரிய பல செல்வங்களும் பெரிய மேன்மைக ளும் உன் பால் உரிமையாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/36&oldid=1327412" இலிருந்து மீள்விக்கப்பட்டது