பக்கம்:தரும தீபிகை 6.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2184 த ரு ம தீ பி ைக தெய்வீகமுடையது ஆகலால் அதனை யுடையவன் அ ல் ல ல் யாதும் நேராமல் நல்ல சுகத்தை நேரே நன்கு காண்கின் முன். எதிரதாக் காக்கும் அறிவினர்க்கு இல்லே அதிர வருவதோர் நோய். (குறள், 429) பின்னே வருகிற அபாயக்கை முன்னதாகவே யூகமாய் அறிந்து காக்க வல்ல விவேகமுடையவர்க்கு நடுங்கத் தக்க தன் பம் யாதும் நேராது எனத் தேவர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். எவ்வகையிலும் இடர் நேராமல் செவ்வையாகப் பாதுகாக் தத் தன் சீவியத்தை இனிது நடத்துகின்றவன் எவனே.அவனே யாண்டும் சிறந்த மேதையாய் உயர்ந்து திகழ்கின்ருன். - மதியூகம் அதியோகம் என்பது பழமொழி. சித்த சுத்தியும் தெளிந்த புத்தியும் தெய்வத்தின் நிலையங்களாயுள்ளன. ஆகவே அவை அமைந்த போது அங்கே அதிசய மகிமைகள் தோன்று கின்றன. ஞானம் தெய்வத்தின் தானமா யுள்ளது. “No divinity is absent if prudence is present.” (Juvenal) யூகம் உள்ள இடத்தில் தெய்வீகம் உள்ளது என்னும் இது இங்கே உணரவுரியது. அரியமதி பெரிய விதியாய்ப் பேராண்மை புரிகிறது. நல்ல அறிவால் நலம் பல விளைகின்றன. தனது மேதையால் இந்திரன் ஏகம் நீங்கினன். பகைவகை யினரை எவ்வகையிலும் நம்பலாகாது என்று அன்று மு த ல் அவன் நன்கு தெரிந்து கொண்டான். மயிரை ஒட்ட மழிக்கா லும் மறுநாள் அது கலை நீட்டும்; உள்ளத்தின் செயிரும் அவ் வாறே உருத்து வரும். அகத்தில் செயிரோடு தோய்க் தள்ள பகைவனை முகத்தின் மயிரோடு ஒப்பக் காட்டியது இகல் மூண்டு நீண்டு வரும் நிலைமையை நேரே தெரிய என்க. உள்ள மயிரை ஒழித்தாலும் ஒல்லேயது மெள்ள முளேத்து மிகுதல்போல்-உள்ளம் பகையாளுர் வஞ்சம் பறித்தாலும் உள்ளே தொகையாமே நம்பல் துயர். பகைவன் எவ்வளவு பணிந்து தணிந்தாலும் அவனைக் கண்க வகை கினைந்து நம்பாதே; தகுதியாக உணர்ந்து ஒழுகுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/361&oldid=1327758" இலிருந்து மீள்விக்கப்பட்டது