பக்கம்:தரும தீபிகை 6.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்பத்தைந்தாம் அதிகராம். யூ கி. அஃதாவது மதியூகம் வாய்ந்த மந்திரியின் நீர்மை. அரிய பல அரசகாரியங்களை அதியூகமாய் ஆராய்க்க ஆற்றவல்லவனது ஏற்றம் கூறுகின்றமையின் இஃது ஈண்டு வைக்கப்பட்டது. 841. கண்போல் அரசுக்குக் காட்சி புரிந்தமைச்சு மண்பால் அமைந்து மதிசுரந்து-கண்பால் அரிய வினைகளை ஆற்றி நெறியே உரியவய்ை நிற்பன் உயர்ந்து. (க) இ-ன். அமைச்சன் அரசனுக்குக் கண்போல் அமைந்து காட்சி கள்புரிந்த அறிவு நலங்கள் சுரந்து உரிமையோடு அரிய கருமங் களே ஆக்கியருளி உலகிற்கு உயர்க்க நன்மைகளை உதவி சிற்பன். மந்திரியின் மாண்புகள் சிந்தனை செய்ய வந்தன. ஒரு நிலமண்டலத்தை நெறிமுறையே பாதுகாத்து ஆண்டு வருபவன் அரசன் என அமைக்கான். அவனுக்கு எவ்வழியும் உறுதிக் கணையாய் நின்று அ றி வு நலங்கள் கூறி ஆகரவு புரிந்து நீதி தெரிந்து நெறியே வருபவன் அமைச்சன் என வங்கான் மதிநலம் அமைந்து விதிமுறை தெளிந்து ஆட்சி கி லை க் கு உரிய துறைகளை உணர்ந்து மன்னனுக்கு அண்மையில் அமர்ந்து உண்மையாக உதவி புரிபவன் என்னும் குறிப்புகளை அமைச்சன் என்னும் பெயர் உணர்த்தி நிற்கிறது. அரசனுக்கு உரிமையாய் யாண்டும் உதவிபுரிய அமைந்தவன் அமைச்சன் என நேர்ந்தான். மந்திரி, அமாத்தியன், உழையன், சூழ்வோன், முன்னேன் எண்ணன், நூலோன், கேர்ச்சிக் துணைவன் முதலிய பல பெயர் கள் அமைச்சனுக்கு அமைந்திருக்கின்றன. யாவும் காரணக் குறிகளால் வந்து அவனது கரும நிலைகளே உணர்த்தி நின்றன. எண் ணர் நூலோ அமைச்சர் மந்திரியர். (பிங்கலங்கை) பிங்கல முனிவர் மந்திரிகளை இங்கனம் குறித்திருக்கிார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/365&oldid=1327762" இலிருந்து மீள்விக்கப்பட்டது