பக்கம்:தரும தீபிகை 6.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 196 த ரும பிே கை மதி யூகியான மந்திரியின் அறிவுரைகளைக் கேட்டுப் பருவம் கவருமல் கருமங்களைக் கருதிக் கடைமைகளைச் செய்துவரின் அங்க அரசனது ஆட்சி அதிசய மாட்சிகளை அடைந்து வரும். நிகழ்கால நிலைகளையும், வருங்கால வகைகளையும் ஒருங்கே கூர்ந்து உணர்ந்து காரியங்களை ஒ | ங் த செய்வது மந்திரியின் கடமையாய் வந்தது. உறுவதை உணர்வது யூகியின் இயல்பாம். மந்திரிக்கு அழகு வருபொருள் உரைத்தல். தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை. (நறுந்தொகை) மங்கிரிக்கும் தந்திரிக்கும் உரிய கன்மைகளை ஒரு மன்னன் இன்னவாறு குறித்திருக்கிருன். த ங் தி ரி=சேனைத்தலைவன். எதையும் முன்னதாக யூகித்த அறிக்க மன்னனுக்கு நன்னய மாகக் கருமம் புரிவதே மந்திரியின் கருமமாம்; ஆகவே அவனது அதிசய அறிவும் ஆலோசனை நெறியும் குறிப்பும் பொறுப்பும் கெரியலாகும். கூரிய சிக்கனையாளன் சீரிய மந்திரியாகின்ருன். வேந்தன் உளம் அறிந்து வேற்ருேர் திறமறிந்து எந்து குடிகள் இயல்பறிந்து-சார்ந்ததிறம் எல்லாம் எதிருணர்ந்து என்றும் இறைக்கிதம்செய் கல்லானே மந்திரியாம் கன்கு. இந்தவாறு மந்திரி மதிக்கப்பட்டுள்ளான். நீதிமுறை கோடாமல் நெடிய புகழோடு வேந்தன் நிலைத்து வருவது அமைச்சன் ஆட்சி செலுத்திவரும் அமைதியாலேயாம். அவனது கல்வியறிவு பல்வகை நெறிகளிலும் பரவி நல்ல பலன் களே ஆற்றி வருகின்றது. ஆகவே உலகம் அவனைப்போற்றுகிறது. வத்தவ தேசத்த மன்னனுடைய முதல் மந்திரி சிறந்த மதி மான். பகைவர்களால் நேர்ந்த அரிய பல அல்லல்களை எல்லாம் தனது அறிவின் திறத்தால் நீக்கி அரசை எவ்வழியும் செவ்வை யாப்ப் பேணி வங்கமையால் அவனே அதிசய மதியூகி எ ன் று உ ல க ம் துதி செய்து வங்கது. உயர்ந்த யூகி என்று சிறந்த பெயரைத் தனி உரிமையாக அவன் இனிது அடைந்து நின்ருன். அவனுடைய குணநீர்மைகளையும் வினையாண்மைகளையும் விதயங் களேயும் வேந்தன் நினைந்து கினைந்து வியந்து மகிழ்ந்துள்ளான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/373&oldid=1327770" இலிருந்து மீள்விக்கப்பட்டது