பக்கம்:தரும தீபிகை 6.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2200 த ரு ம தீ பி ைக துணிவுறும் அளவும் சூழ்ந்துபின் இராது சூழ்வினை பொருந்தும்வாய் எல்லாம் தனிவற முடித்தல் அது தகா தாயின் தருபொருள் வினேயிடம் காலம் அணியுறு கருவி ஐந்தும் ஆய்ந்து இகலே அடர்த்தல் ஒட்டலர்க்கழி வுஅறுங்கால் பணிவுசெய் தேனும் காத்தல்முத் தொழிலும் பண்புடை அமைச்சர்தம் தொழிலே. [5] (விநாயகபுராணம்) உயர்ந்த மந்திரிகளுடைய குணாலங்களையும் செயல்நிலை களையும் இவை வரைக் து குறித்துள்ளன. பொருள் வகைகளைக் கூர்ந்து உணர்ந்து அறிவமைதிகளைத் தேர்ந்துகொள்ளவேண்டும். கல்வியறிவோடு அரிய ப 3) பண்பாடுகளும் இயல்பாக அமைந்தவரே பெரிய இராச தந்திரிகளாய்ப் பேர் பெற்று வரு கின்றனர். சுமந்திரன், சக்திய கீர்த்தி, கருமதத்தன், யூகி, உரு மண்ணுவா, வயந்தகன், சேமன், சுச்சுகன், கருணுகரன், பட்டி, சந்தகன், சாமந்தகன், சுமதி முதலிய மத்திரிகள் எல்லாரும் உத்தம குணசீலர்களாய் ஒளி பெற்றுள்ளனர். புகழ் எல்லாம் புண்ணிய நீர்மைகளில் கண்ணியமாய்ப் பொலிந்து விளைந்தன. தன்னலம் கரு.காமல் மன்னனுடைய ஆட்சிக்கு மாட்சிமை புரிந்து மாநிலத்தைப் பேணி வந்தவரே மகிமையாளராய்க் காண வந்தனர். தரும நீதிகள் தழுவி வந்தமையால் பெருமைகள் பெருகி வந்தன. நெறிமுறைகளின் அளவே நிலை உயர்கின்றது. ஆங்கில அறிஞரான பர்க்(Burke)என்பவர் சிறந்த அரசியல் நிபுணர்; உயர்ந்த பேச்சாளி. இராச சபையில் ஒருமுறை அவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது உண்மையான மந்திரிக்கு அழகு என்ன?’ என்று சிலர் நன்னயமாப் வினவினர். அதற்கு அவர் உடனே பதில் சொல்லியது அயலே வருகிறது. “What morality requires, true statesmanship should accept.” [Burke] "நீதிமுறையின் நெறியை உரிமையோடு உவந்து கொள் வதே உண்மையான அமைச்சரம்” என இ வ் வா து அவர் உரைத்தருளினர். கியாயம் நிலைத்துவர அரசு செழித்து வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/377&oldid=1327775" இலிருந்து மீள்விக்கப்பட்டது