பக்கம்:தரும தீபிகை 6.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2208 த ரும பிேகை “wise kings generally have wise counsellors; and he must be a wise man himself who is capable of distinguishing one.” [Diogenes] 'விவேகமுள்ள அரசர் மதியூகமான மந்திரிகளை அடைந்து கொள்கின்றனர்; சிறந்த ஒரு விவேகியைத்தெரிந்து எடுக்கவுரிய வன் உயர்ந்த யூகி யாயிருக்கவேண்டும்'; என்னும் இது ஈண்டு உணர்ந்து கொள்ளவுரியது. அரியமதி உரியமதியை மருவுகிறது. மகா மேதையான தசரதன் சிறந்த மதியூகிகளை ம ந் தி ரி களாக மருவி யிருக்கான். அந்த அமைச்சர்களுடைய நிலைமை தலைமை நீர்மை சீர்மைகளுள் சில அயலே காணவருகிருேம். குலமுதல் தொன்மையும் கலேயின் குப்பையும் பலமுதல் கேள்வியும் பயனும் எய்திர்ை கலமுதல் கலியினும் நடுவு நோக்குவார் சலமுதல் அறுத்து அரும் தருமம் தாங்கினர். (I) கல்லவும் தீயவும் நாடி காயகற்கு எல்லேயின் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் ஒல்லேவந்து உறுவன உற்ற பெற்றியின் தொல்லேகல் வினே என உதவும் சூழ்ச்சியார். (2) உற்றது கொண்டு மேல் வந்து உறுபொருள் உணரும் கொளார்; மற்றது வினேயின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் பெற்றியர்; பிறப்பின் மேன்மைப் பெரியவர்; அரிய நூலும் கற்றவர் மானம் கோக்கின் கவரிமா வனேய நீரார். (3) காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரியக் கற்ற அாலுற கோக்கித் தெய்வம் துனித்தறம் குனித்த மேலோர்; சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்து கொண்டு பால்வரும் உறுதி யாவும் தலைவற்குப் பயக்கும் ரோர். (4) தம்உயிர்க்கு உறுதி எண்ணுர்; தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி மீதி விடாதுகின்று உரைக்கும் வீரர்; செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார்; தெரியுங்காலம் மும்மையும் உணர வல்லார்; ஒருமையே மொழியும் நீரார். (5) (இராமா, அயோத்தி, மந்திரப்படலம்) மந்திரிகளின் மாண்புகளைக் குறித்து வந்திருக்கும் இங்கப் பாசுரங்கள் இங்கே நன்கு சிந்திக்கக்கக்கன. கூறியுள்வு குண நீர்மைகள் சீரிய பண்பாடுகளோடு சி ற த் து வளர்ந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/385&oldid=1327784" இலிருந்து மீள்விக்கப்பட்டது