பக்கம்:தரும தீபிகை 6.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2210 த ரும தி பி கை காட்டுக்கு அரசன் நேரே தலைவன் ஆயினும் ஆட்சிக்கு அமைச் சர் மாட்சி புரிந்து வருகின்றனர். அவர் இலரேல் அது தவற டைய நேரும். கற்பகம் காமதேனு சிந்தாமணி முதலிய அம்புதச் செல்வங்கள் அமரர் கோ லு க் கு உரிமையாய் அமைந்திருக் கின்றன. இருக்தும் கனது முதல் மந்திரியான வியாழகுரு ஒரு முறை மனம் கனன்று அயலே பிரிந்து போனமையால் மன் னன் பெருந்துயரங்களை அடைந்தான். பின்னர் அவர் வ ந் து சேர்ந்தார்; ஆட்சி நன்னயமாய் நன்கு நடந்து வந்தது. வேந்தன.து விழுமிய த லே ைம மந்திரிகளின் கிழமையான நிலைமையால் நிலைத்து வருகிறது. சூழ்ச்சித் துணைவர் என் அமைச் சருக்குப் பெயர் அமைந்துள்ளமையால் அரசுக்கும் ஆட்சிக் கும் அவர் மாட்சி புரிந்து வரும் காட்சி மருமமாக் காணலாம். சுற்றுகின்று எரியும் செம்பொன் மணிமுடி சுடரச் சூடி வெற்றிவெண் குடையின் நீழல் வேந்தன் விற் றிருக்கும் ஏனும் மற்றவன் மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலியும சால்பும் ஆற்றமில் அரசும் கோலும் ஆபவர் அமைச்சர் அன்றே. (1) வால்வளே பரவி மேயும் வளர்திரை வளாகம் எல்லாம் கோல்வளே வுருமல் காக்கும் கொற்றவன் நெடியன் ஏனும் மேல்விளே பழியும் வெய்ய வினைகளும் விலக்கி கின்ருர் அால்விளே புலவர் அன்றே நுணங்குபோது அணங்கு தாரீர்.(2) வீங்குநீர் உலகம் காக்கும் விழுதுகம் ஒருவ ளுலே தாங்கலாம் தன்மைத் தன் அறு தளேயவிழ் தயங்கு தாரீர் பாங்கலார் பணியச் சூழும் அாலவர் பாகம் ஆகப் பூங்குலாம் அலங்கல் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே. (3) செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னல் அறிந்தவை அமர்ந்து செய்யும் அமைதியான் அரசன் ஆவான்; செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி அறிந்தவை இயற்று கிற்கும் அமைதியார் அமைச்சராவார். (4) வாள்வலித் தடக்கை மன்ன்ர் வையகம் வணக்கும் வாயில் தோள்வலி சூழ்ச்சி என்ருங்கு இருவகைத் தொகையிற் ருகும்; ஆள்வலித் தானே யார்கட்கு ஆதியது அழகி தேனும் கோள்வலிச் சீயம் ஒப்பீர் சூழ்ச்சியே குணமது என்ருன், (5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/387&oldid=1327786" இலிருந்து மீள்விக்கப்பட்டது