பக்கம்:தரும தீபிகை 6.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1962 த ரும தீ பி. கை நல்ல எண்ணத்தால் மனிதன் எல்லா நலன்களையும் எங்கும் அடைந்து வருகிருன். உயிர் வாழ்க்கைக்கு உரிய உயர் நிலைகள் யாவும் உள்ளத்தின் பரி பாகத்தாலேயே உளவாகி வருவது ஒர்ந்து சிந்திக்க வுரியது. உள்ளே உள்ள உள்ளத்தின் படியே வெளியே மனிதன் தெளிவாய் விளங்கி நிற்கின்ருன். “ will is the essence of man.” [Philosophy] த்ெதம் மனிதனது சத்து ' என்னும் இது ஈண்டு உ4க் துணரத் தக்கது. மனிதனுடைய சாரம் முழுவதும் ம” நினைவில் உள்ளமையால் அதன் நிலைமைக்குத் தக்கபடியே அவன் நிலைத்து வருகிருன். நல்ல நினைவால் எல்லா கலன்களும் விளைகின்றன. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம். குறள், 457) என்ற கல்ை உ யிருக்கும் மனதுக்கும் உள்ள உறவுரிமையும் உறுதி நலனும் உணரலாகும். மனம் செம்மையானுல் இம்மை யும் மறுமையும் நன்மையாய் வருகின்றன. அரிய மகிமைகள் யாவும் இனிய மனத்தால் தனியே வந்து அமைகின்றன. கல்வி யறிவை விட சல்ல மனம் உயர்க்கது. Ho மனப் பண்பாடோடு படிந்த பொழுதுதான் அறிவு உப வாய் மதிப்புறுகிறது. படியாதாயின் அது கடிதாப் அயலே கிரிகிறது. இதயம் இனிய கானல் இன்ப நலன்கன் எல்லாம் அங்கே உதயமாகின்றன. மனம்போல வாழ்வு என்னும் பழ மொழியால் அதன் விழுவிய நிலை விளங்கி நிற்கிறது. சான்ருேர் பெரியோர் என உலகில் ஒளி பெற்றுள்ளவர் எவரும் மன நலத்தாலேயே உயர்ந் திருக்கின்றனர். “ Character lies in the will, and not in the intellect. ” (Schopenhauer

  • ஒழுக்கம் மனத்தில் அமைந்துள்ளது; அறிவில் இல்லை :

என மேல் நாட்டு அ ஞ ரு ம் இங்கனம் குவிக்கிரு' கின்றனர். இனிய மனம் இன்ப நிலையமாய் நிலவுகிறது. உயர் வாழ்வுக்கு உரிமையாயுள்ள இத்தகைய மனத்தைட பண்படுத்தி ஆட்சியை மாட்சியாக் கருதி வந்தால் அந்த அரசன் உத்தம நிலையில் உயர்ந்து ஒளி மிகுந்து விளங்குவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/39&oldid=1327416" இலிருந்து மீள்விக்கப்பட்டது