பக்கம்:தரும தீபிகை 6.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. யூ கி 2213 தோய்ந்த அளவே நன்மைகள் வாய்ந்து நலம் பல காண்கின்றன. கூ ர் ங் த உணரும் அறிவும் ஒர்ந்து செய்யும் வினையும் மனிதனை உயர்ந்தவன் ஆக்கி அருளுகின்றன. மேலோர் கீழோர் என்பன எல்லாம் விவேகங்களாலும் வினைத்திறங்களாலும் விளைந்து வங் துள்ளன. அறிவும்ஆற்றலும் அதிசயவற்றங்களை அருளுகின்றன. மனித இனம் இருவகை நிலையில் மருவியுள்ளது. ஆண்மை பெண்மை என அமைந்து அது கேண்மை கிளர்ந்த வருகிறது. ஆண்மகன் அருந்திறலாண்மைகளோடு அரிய வினைகளைச் செய்து பெரிய மேன்மைகளை அடையவுரியவன். பெண்மகள் திருந்திய பண்போடு கானம் பேணி மானம் காத்து மனே வாழ்வு புரிய உரியவள். இருபாலும் இவ்வாறு சரியாக அமையின் அங்க நாடு எவ்வழியும் செவ்வையாப்ப் பெருமேன்மைகளை அடைந்து விளங்கும். சிறந்த நீர்மைகள் நிறைந்த சீர்மைகளாகின்றன. உறுதி ஊக்கங்களோடு முயன்று வருபவன் உயர்ந்து வரு தலால் அவனை உலகம் உவந்து புகழ்ந்து கொண்டாடுகின்றது. “This world belongs to the energetic.” (Emerson) ஊ க் கி முயல்பவர்க்கு இவ்வுலகம் உரிமை ஆகிறது என்னும் இது ஈண்டு ஊன்றி உணரவுரியது. உள்ளத்தின் முயற்சி அளவே உலகத்தில் உயர்ச்சி விளைகிறது. ஊக்கம் வர ஆக்கம் வருகிறது. உரிய கடமைகளை உறுதியோடு செய்வது பெரிய கருமம் ஆகிறது. ஆணுக்கு அழகு ஆள்வினை ஆற்றல்; பெண்ணுக்கு அழகு மரியாதையோடு மனைவாழ்வு போற்றல்; வினையாளுக்கு யாதும் ஏவாமல் உரிமையோடு வேலைசெய்தல்; மந்திரிக்கு زمتUPG [ٹائے۔ அழகு எதையும் தெளிவாக உ ன ர் ங் த தேசத்துக்கு இதம் புரிதல். உரிய கடமைகளைச் செய்பவர் பெரியவராகின்ருர். தக்க தன்மைகளை இழந்து விடின் மிக்க பு ன் ைம க ள் விளைந்து விடும். கருமங்களையே கருமங்கள் கழுவியுள்ளன. மந்திரியிடம் தெளிக்க அறிவில்லையானல் அந்த அரசு பல வகையிலும் நிலை குலைந்து இழிந்த படும். அரசன் செல்வக்களிப் பில் மூழ்கி அல்லது புரிய நேர்க்கால் அவனுக்கு நல்ல நீதிகள் கூறி உள்ளத்தைத் திருத்தி உயர்ந்த வழியில் செலுத்த வேண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/390&oldid=1327789" இலிருந்து மீள்விக்கப்பட்டது