பக்கம்:தரும தீபிகை 6.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. யூ கி 2215 அதிசய ஆற்றல்களை அருளியுள்ளது. எதையும் நுணுகியுணரும் யூகம்உடையவன் எங்கும்பேரறிவாளனப்ப் பெருகி வருகிருன். Discretion is the perfection of reason, and a guide to us in all the duties of life. [Bruyere) மதியூகம் அறிவின் நிறைவாயிருக்கிறது; வாழ்க்கையின் கடமைகள் எல்லாவற்றிலும் நமக்கு அது வழிகாட்டியா யுள் ளது என புரூயர் என்பவர் இங்கனம் தெளிவாக் காட்டியுள்ளார். The better part of valour is discretion, in the which better part I have saved my life. (Shakespeare) விரத்தின் சிறந்த பாகமே விவேகம், அதில் எனது சீவியத் தைச் செவ்வையாப்ப்பேனி வருகிறேன் என்னும் இது இங்கே காணவுரியது. மதிநலம் வாழ்வை மகிமைப்படுத்தி வருகிறது. தனிமனிதன் வாழ்வில் விவேகம் இவ்வளவு பாதுகாப்பா யுள்ளது; ஆகவே பலகோடி மக்களுடைய வாழ்வுகளே வளமாப் பேணியருள வுரிய ஆட்சியாளரிடம் அது எவ்வளவு நலமா இசைந்திருக்க வேண்டும்! என்பது ஈண்டு எளிது தெளிவாம். இத்தகைய புத்திசாதுரியம் உடையவர்களையே உத்கம மங் திரிகளாக அரசன் உவந்து கொள்ளவேண்டும். மதியூகம் மரு வாத வரை மருவில்ை அதிதுயரம் ஆகும் ஆதலால் அவரைத் தம ராகத் தழுவலாகாது. உயர்ந்த விவேகிகளை உறுதித்துணையாக் கொண்டால் அங்க ஆட்சி எ க்க வகையிலும் சிறந்து விளங்கும். == 850. காலம் அறிந்து கருமம் புரிந்துரிய கோலின்பம் கூரக் குடிபுரந்து-சீலம்கைக் கொண்ட அமைச்சின் குணாலனே ஏத்திகிற்கும் மண்டலம் எல்லாம் மகிழ்ந்து. (ώ) இ-ள். பருவ காலங்களை உணர்ந்து உரிய கருமங்களைக் கருதிச் செப்து அரசு இன்பம் மீதுளர்ந்து இனிது வாழ்ந்து வரக் குடிகளே அன்பு கூர்ந்து புரந்து குணநலங்களோடு ஒழுகி வருகிற மந்திரி கயை உலகம் முழுவதும் உவந்து புகழ்ந்து போற்றும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/392&oldid=1327791" இலிருந்து மீள்விக்கப்பட்டது