பக்கம்:தரும தீபிகை 6.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆற்றல் 1963 உலகப் பாதுகாப்பில் பலவகை நிலைகளைக் கூர்ந்து கவ னிக்க வேண்டியவனப் வேந்தன் நேர்ந்து நிற்கின்ருன். துறவி கள் சித்தர்கள் என உலகவாழ்க்கைகளைக் கடந்தவர்கள் போல் உயர்வேடங்கள் கொண்டுள்ளவர்களையும் அரசன் நாடி அறிந்து உண்மை நெறிகளில் ஒழுகி வரும்படி செம்மையா உறுதிகள் புரிய வேண்டும் ஆதலால் யாண்டும் அவன் ஆராய்ந்து ஒர்ந்து தேர்ந்து வருவது நீண்ட சதுரப்பாடாப் நிலவி வருகிறது. வேட நெறிகில் லார் வேடம் பூண்டு என்பயன்? வேட நெறிகிற்போர் வேடம் மெய் வேடமே; வேட நெறிகில்லார் தம்மை விறல் வேந்தன் வேட கெறிசெய்தால் விடது வாகுமே. (1) மூடம் கெடாதோர் சிகை நூல் முதற் கொள்ளில் வாடும் புவியும் பெருவாழ்வும் மன்னனும் பீடுஒன்று இலகுைம் ஆதலால் பேர்த் துணர்ந்து ஆடம் பரநூல் சிகை யஅத்தால் நன்றே. (2) ஞானம் இலாதார் சடைசிகை நூல் கண்ணி ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை ஞானிக ளாலே தரபதி சோதித்து ஞானம் உண்டாக்குதல் கலமாகும் காட்டிற்கே. (3) (திருமந்திரம்) குடிசனங்களையே அன்றித் துறவற நிலைகளிலுள்ளவர்களை யும் அரசன் கூர்ந்து கவனித்து ஒர்ந்து செய்ய வேண்டிய நீதி முறைகளைக் குறித்துத் திருமூலர் இவ்வாறு உரைத்திருக்கிரு.ர். ஆன்ற உரைக்குறிப்புகள் ஊன்றி உணரவுரியன. அகத்தே ஞான லெங்கள் இன்றிப் புறத்தே உயர்ந்த தவ வேடங்களைப் புனைந்து கொண்டு பெரிய ஞானிகளைப் போல் திரிகின்ற போலி வேடதாரிகளே அரசன் தண்டித்து அடக்கா விட்டால் நாட்டுமக்கள் அவரை நம்பி ஏமாந்து போவர்; போக வே விவேகங்கள் குன்றித் தீமைகள் பெருகும் ஆதலால் அவை நிகழாதபடி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வேக்கலுக்கு நேர்ந்து கின்றது. அல்லவை களைவது கல்லவை புரிவதாம். கபடம் வஞ்சனை பொப் களவு முதலிய இழிநிலைகள் மனித சமுதாயத்தில் பரவாமல் அரசன் பாதுகாத்துவரின் அந்த நாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/40&oldid=1327417" இலிருந்து மீள்விக்கப்பட்டது