பக்கம்:தரும தீபிகை 6.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2242 த ரு ம தி பி ைக எண்ணினர் எண்ணகப் படாத செய்கையான்; அண்ணினர் அகன்றவர் திறத்தும் ஆணையான்; கண்ணினர் பகைவர் என் றிவர்க்கு நாளினும் தண்ணியன் வெய்யன்கம் தானே வேந்தனே. (1) கற்ற நூலினர் கலந்த காதலால் உற்ற போழ்துயிர் கொடுக்கும் ஆற்றலான்; கொற்ற வேலவன் குடையின் முேலார் சுற்ற மாண்பினர் சுடரும் வேலிய்ை. (சூளாமணி) (2) சுரமை காட்டு மன்னனுடைய மாண்புகளை இவை வரைந்து காட்டியுள்ளன. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன. அரிய பண்புகளால் பெரிய மேன்மைகள் நேரே பெருகி வருகின்றன. இனிய நீர்மையால் உயர்ந்து எவ்வுயிர்க்கும் இகம் புரிந்து வருகிற மன்னன் யாண்டும் மனிததெய்வமா மருவி மிளிர்கிருன். _ாக _ 859, உள்ளம் உயரின் உலகில் அவனுயர்ந்து வெள்ளமென மேன்மைகளை மேவுகின்ருன்-உள்ளம் இழிந்து படினே இழிமகனய் எங்கும் கழிந்து படுகின்ருன் காண். (க) இ-ள். உள்ளம் நல்ல வழியில் பழகி உயர்ந்தால் உலகில் உயர்ந்து அளவிடலரிய மேன்மைகளை அடைகிருன்; அது இழிந்து பட் டால் அவன் இழிமகய்ைக் கழிந்து ஒழித்து போ கிருன் என்க. உடலின் உள்ளே யிருந்து உணர்வது உள்ளம் என வந்தது. வெளியே நிகழுகின்ற செயல் நிலைகளுக் கெல்லாம் இது மூல யந்திரமாயுள்ளது. உள்ளம் அகத்தே யிருந்து இயக்க மனித வுலகம் புறத்தே இயங்கி வருகிறது. இதன் அதிசய ஆற்றல்கள் அளவிடலரியன. இது ஆட்டிய படியே ய | வ ரு ம் ஆ டி. வருகின்றனர். மனம் நடத்த மானிடங்கள் நடக்கின்றன. கண்ணுடி உருவங்களைக் காட்டுதல் போல் மனம் மனித இறு ைடய மருமங்களையெல்லாம் தெளிவாகக் காட்டுகிறது. உயர்வு தாழ்வு இன்பம் துன்பம் என வருவன யாவும் இதன் இயல்பின் அளவே விளைவனவாம். சிங்தைவழியே சீவர்கள் வாழுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/419&oldid=1327818" இலிருந்து மீள்விக்கப்பட்டது