பக்கம்:தரும தீபிகை 6.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2244 த ரும பிே கை உள்ளம் உடைமை யுடைமை; பொருளுடைமை கில்லாது நீங்கி விடும். (குறள், 592) ஊக்கம் உ ைடய நல்ல உள்ளமே பெரிய பாக்கியம்; அதற்கு நிகரான செல்வங்கன் வேறு யாதும் இல்லை எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். ம னி த ன் அடையவுரிய பெருமைகள் யாவும் உள்ளத்திலேயே மருமமா மருவியுள்ளன. இத்தகைய உள்ளத்தைப் புனித நினைவுகளால் இனிது பண் படுத்திவரின் அந்த வேங்கனிடம் மேம்பாடுகள் விரிந்து விளைந்து வருகின்றன. ம ன ம் பெருங்கன்மையாய் உயர்ந்து வருதற்கு அடையாளம் தாழ்ந்த இனங்களை ஆழ்ந்த அனுதாபத் .ே த .ா டு ஆதரித்து வருவதேயாம். அன்பு நலம் இன்ப நிலையமாகின்றது. தலைவனப் உயர்ந்துள்ள மன்னன் குடிகளை உரிமையோடு பேணி வருங் கால் அரிய பல பெருமைகளை அடைந்து கொள்ளு கிருன். உலகமாக்தர் அவ் வேந்தனை உவந்து புகழ்ந்து வருகின் ருர். உண்மையான உதவியால் உயர்ந்த மகிமைகள் உளவாம். உலகத் தோரே பலர் மற் செல்வர் எல்லா ருள்ளும் கின் கல்லிசை மிகுமே செயலமை கண்ணிச் சேரலர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை வசையில் செல் வ! வான வரம்ப ! இனியவை பெறினே தனிதனி நுகர்கேம் தருகென விழையாத் தாவில் நெஞ்சத்துப் பகுத்துாண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென வாழ்தி நீ யாகன் மாறே. (பதிற்றுப்பத்து,58) சேர மன்னனுடைய சீர்மை நீர்மைகளை இது கூறியுள்ளது. குற்றம் இல்லாத நல்ல உ ள் ள ம் உடையனப் எல்லார்க்கும் இரங்கி உதவிப் பகுத்து உண்டு பல்லுயிர் ஒம்பிப் பிறர்க்கு என அவன் வாழ்க் த வக்கான்; ஆகவே உலக மன்னர் எல்லாரினும் உயர்ந்த கீர்த்திமானப் ஒளி பெற்று எவரும் புகழ்ந்து போற்ற கின்அள்ளான் என்பதை இங்கே உணர்ந்து கொள்கிருேம். உள்ளத்தில் சல்ல நீர்மை தோய்ந்தவன் இனிய தருமவா குய் உலகத்தில் உயர்ந்து திகழ்கிருன். உயர்வுகள் செயல்களின் இனிமைகளால் செழித்துத் தேசு மிகுந்து சிறந்து வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/421&oldid=1327820" இலிருந்து மீள்விக்கப்பட்டது