பக்கம்:தரும தீபிகை 6.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்பத்தேழாம் அதிகாரம் த ர ம். அஃதாவது செயல் இயல்களின் வகையால் வளர்க் து வரும் உயர்வு. தன்மையால் விளைகின்ற நன்மையை நன்குவிளக் குகின்றமையால் ககவின் பின் இது இங்கு வைக்கப்பட்டது. தகவும் தரமும் மிகவும் உறவாய் மேன்மை புரிகின்றன. 861. அரிய வினைகளே ஆற்றி வருவார் பெரியர் எனவே பெருகி-உரியசீர் யாவும் பெறுவர் எவரும் அவரையே மேவி வருவர் விழைந்து. (க) இ-ன். அரிய காரியங்களைச் செய்து வருகின்றவர் பெரிய மேன் மைகளை எய்தி உயர்கின்ருர்; அந்த மேலோரையே யாவரும் விழைந்து புகழ்ந்து வியந்து உவந்த போற்றி வருவர் என்பதாம். தகுதி, கரம் என்னும் மொழிகள் பொருள்களின் உயர்நிலை களே உணர்த்தி வருகின்றன. உயர்ந்தது வியந்து புகழப் பெறு கிறது; இழிக்கது இகழ்ந்து கள்ளப்படுகிறது. மனிதனுடைய உயர்வு தாழ்வுகளுக்கு மூலகாரணம் அ வ ன் அகத்திலேயே அமைந்திருக்கிறது. உள்ளம் உயர உயிர்கள் உயர்கின்றன. உள்ளம் துணிந்த ஊக்கி முயன்று அரிய காரியங்களை ஆற்றுகின்றவன் பொருளும் புகழும் ஏற்றமாப் பெறுகின்ருன்; பெறவே உலகம் அவனை விழைந்து நோக்குகிறது; வியந்து போற்றுகிறது. ஊன்றியமுயற்சியால் உயர்ச்சிகள் உறுகின்றன. ஒருவன் செய்து வருகிற அரிய செயல் அவனைப் பெரிய மனிதன ஆக்கி வருகிறது. வினையாண்மை வியக்கத்தக்க மேன் மைகளை விளைத்து வருதலால் அத மனிதனுடைய மகிமைக்கு வித்தக வித்தாய் விளங்கி எத்தகைய கலங்களையும் அருளுகின்றது. பறவை மிருகம் முதலிய எல்லாப்பிராணிகளினும் மனிதன் மேலான நிலையில் மேவி நிற்பது அவனது உள்ளம் உணர்வு செயல்களினலேயாம். உள்ளத்தால் எண்ணுகிருன்; எண்ணிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/425&oldid=1327824" இலிருந்து மீள்விக்கப்பட்டது