பக்கம்:தரும தீபிகை 6.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2250 த ரும தி பி கை என்கிழல் வாழ்நர் செல்கிழல் காணுது கொடியன் எம் இறைஎனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி அாற்றும் கோலேன் ஆகுக.” (நெடுஞ்செழியன்) 'என்னை இளேயன் என்று இகழ்ந்து கூ றி ப் போருக்கு வங்க வேக் கரைப் பொருது கொலைத்து நான் வெற்றி பெறேன் ஆயின் கொடுங்கோலன் என்று என்குடிகள் தாற்றும் பழியை நான் அடைவேகை” என்று இவ்வாறு விரசபதம் கூறிச்சென்ற வன் போரில் அனைவரையும் ஒருங்கே வென்று பெருங் கீர்த்தி பெற்ருன். இவனது வெற்றிநிலை எங்கும் வியப்பை விளைக்கது. கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன் ஆலங் கானத் தகன்றலே சிவப்பச் சேரல் செம்பியன் சினங்கெழு திதியன் போர்வல் யானேப் பொலம்பூண் எழினி நார் அரி கறவின் எருமை யூரன் தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன் என்று எழுவர் கல்வலம் அடங்க ஒருபகல் முரசொடு வெண்குடை அகப்படுத் துரைசெலக் கொன்றுகளம் வேட்ட ஞான்றை | வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே. (அகம், 36) சோழன் முதலிய ஏழு மன்னரையும் அவர் தம் சேனை களோடு ஒருங்கே வென்று இந்த விரபாண்டியன் வெற்றிபெற் அறுள்ள கிலையை நக்கீரர் இவ்வாறு வியந்து பாடியிருக்கிரு.ர். பரு வம் கிாம்பாத இளைஞளுயிருந்தும் அரிய செயல்களை ஆற்றி அதி சயங்களை விளைத்திருக்கலால் உலகம் இவனைத் துதி செய்து தொழுது வந்தது. விர த்திறலால்விழுமியமேன்மைகள் விளைந்தன. மனவுறுதியும் வினையாண்மையும் மனிதனை மகிமையாளகு உயர்த்துகின்றன. உரத்தோடு ஊக்கி வினை செய்பவன் கரத்தில் உயர்ந்து கரணியில் சிறந்து கிறைக்க புகழுடன் திகழ்கின்ருன். ஆற்றும் வினேகள் அருமை யுடையவெனின் போற்றும் உலகம் புகழ்ந்து. உள்ளம் துணிந்து உயர்ந்த குறிக்கோளோடு காரியங்க ளைச் செய்து வருபவன் சீரிய புகழ்களை அடைந்த கொள்கிருன். to Ha-Ho

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/427&oldid=1327826" இலிருந்து மீள்விக்கப்பட்டது