பக்கம்:தரும தீபிகை 6.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1966 த ரும தீ பி. கை " தாம் பெருமையா இருக்கவே மனிதர் நாடுகின்றனர் ” என மனித இயல்பைக்குறித்து எமர்சன் இவ்வாறு உரைத் திருக்கிருர். செல்வம் அதிகாரம் புகழ் முதலிய உயர் நிலைகளை இங்கனம் காடியுழலும் இயல்பினையுடைய மனிதர் அதற்கு உரிய கருமங்களைக் க ரு தி ச் செய்ய வேண்டியவ ராயினர். நாளும் கடமைகளை காடிவரும் அளவே பீடும் பெருமையும் கூடி வரும் செய்யும் வினைகளே செல்வங்களை அருளுகின்றன. ஒருவனுடைய சிறந்த அறிவுக்குத் தகுந்த பயன் தனது க ரு ம ங் க ளே ப் பருவம் கவருமல் அவன் கருதிச் செய்து வருவதேயாம். காரிய நோக்கு சீரிய ஆக்கமாகிறது.

    • To know

That which before us lies in daily life, Is the prime wisdom. ” (Milton) " தினசரி வாழ்க்கையில் தன் முன் உள்ள கடமையை அறிந்து கொள்வதே ஒருவனுக்கு முதன்மையான ஞானம் ஆம்’ என ஆங்கிலக் கவிஞராகிய மில்டனர் இங்ங்னம் கூறியிருக்கிரு.ர். அறிவு மனிதனுக்குப் பெருமை கரும் ஆயினும் உரிய கரு மங்களைக்கருதி முடியாமல் வறிதே மறுகி யிருப்பின் சிறுமையே யாம்; அறிவாளி என்பதை விடக் கருமவீரன் என்பது பெருமை தருவதாம். ஒருவனிடம் கூரிய அறிவு இருந்தாலும் வினையாண் மையில் வீறு கொள்ளவில்லையானல் வியனை மேன்மையை அவன் அடைய முடியாது. உழைப்பே உயர்வை அருளுகிறது. * அறிவு, ஆற்றல் என்னும் இருமொழிகளும் உறவுமுறையா மருவிக் குறிலும் நெடிலுமாக் கூடிவந்துள்ளன. காரண காரிய நிலையில் கருத நின்றன. அறிவுடைய மனிதன் உள்ளம் தணிந்து ஊக்கி வினை ஆற்றுவது ஆற்றல் என வந்தது. ஆற்றல் = செய் தல். ஆண்மையோடு செய்யும் அரிய செயல் தெரிய நின்றது. ' செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளேக்கும் ஆற்றலே. ” (புறம், 88) சோழ மன்னனது அதிசய ஆற்றலை இது குறித்து வந்துள், ளது. பொருளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். அரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/43&oldid=1327421" இலிருந்து மீள்விக்கப்பட்டது