பக்கம்:தரும தீபிகை 6.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2254 த ரும தீபிகை களேயும் அடைய வேண்டும் என்று யாவரும் விரும்புகின்றனர். அகத்தில் கிளைக்கெழுகின்ற விருப்பங்களே ம னி த சமுதா யத்தை யாண்டும் இயக்கி வருகின்றன. வெளியில் விரிந்து தெரி கின்ற அசைவுகள் எல்லாம் உள்ளத்தின் தசைகளால் ஓங்கி யுள்ளன. உலக வாழ்வுகளை உளமே உளவாக்குகின்றது. உரிமையோடு உணர்ந்து கருதுபவன் உயர்ந்த கருத்தனப்ச் சிறக்க விருத்திகளேயடைந்து திகழ்கின்ருன்; அங்ங்னம் கருதா தவன் ஒரு பயனும் காணுமல் விருதாவாய் இழிந்து கழிந்து ஒழிக் த போகிருன். உள்ளம் உடையவன் எல்லாம் உடைய வனப் ஒளி மிகப்பெறுகிருன். அதனை இழந்தவன்யாவுமிழந்தான். நல்ல எண்ணங்களை எண்ணி வருவதினலேயே உள்ளம் ஒளி மிகுந்து உயர்ந்து வருகிறது. தாயின் பால் அருந்திவரும் பிள்ளை போல் தாய சிங் கனைகள் பொருந்தி வருகிற உள்ளம் அதிசய ஆற்றல்களை இயல்பாகவே அடைந்து கொள்ளுகிறது; கொள்ளவே அதனல் அரிய பல மகிமைகள் உரிமையாய் வரு கின்றன. தியான சமாதிகளில் தெய்வீக ஒளிகள் எழுகின்றன. செம்மையான உள்ளம் நன்மைகளை நயிமா அருளுகிறது. விதி நியமங்களை உணர்த்துகிற அறிவினும் அவற்றை உறுதியாகச் செய்து வருகிற உள்ளம் உயர் நலமுடையது. கூர்மையான அறிவினும் நேர்மையான நெஞ்சம் நீர்மை கோய்ந்த ர்ேமை யாய்த் திகழ்கிறது. மனச் செம்மை மகிமைகளை அருளுகிறது. உயிர் வாழ்வின் உயர்வுகள் எல்லாம் உள் ளப்பண்புகளால் உளவாகின்றன. உலக வ | ழ் வு செல்வத்தால் வளம் பெறு கின்றது; செல்வம் முயற்சியால் விளைகின்றது; முயற்சி ஊக்கத் தால் உறுகின்றது; அந்த ஊக்கம் உள்ளக் கிளர்ச்சியால் எழு கின்றது; ஆகவே எல்லா மேன்மைகளுக்கும் உள்ளமே மூல காரணமாயுள்ளமை யுனரலாகும். உள்ளம் நல்ல நிலையில் பழகி வரின் சலங்கள் பல வருகின்றன; இல்லையானல் எல்லா நலங்க ளேயும் இழந்த மனித வாழ்வு பொல்லாத காப்ப் புலைப்படுகிறது. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு. (குறள் 598) உள்ளம் இல்லாதவர்க்கு உளவாம் எள்ளல்களைத் தேவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/431&oldid=1327831" இலிருந்து மீள்விக்கப்பட்டது