பக்கம்:தரும தீபிகை 6.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2256 த ரும தி பி கை விழைந்து புரிக்க வினையின் வழியே யாவும் விளைந்து வரு கின்றன. உள்ளம் ஒர்ந்து கருதினும், வாய் தேர்ந்து மொழியி லும் செயலே கருமங்களை உருப்படுத்தி உயர்வாக்கியருளுகிறது. ஊக்கிச்செய்யும் வினையே உ யிர்க்கு உறுதியை உதவி வருகிறது. Only deeds give strength to life. [Jean paul] செயல்கள் தான் உயிர் வாழ்வுக்கு உறுதி தருகின்றன என ஜீன்பால் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். ஒருவன் கருதிச் செய்யும் கருமம் அவனுடைய சீவியத்தை உயர்த்திச் சீவனுக்கு மேன்மை தருதலால் அது சீவசஞ்சீவியாப் மேவி நின்றது. காரியம் கருதி வர வீரியம் பெருகி வருகிறது. மேலான காரியங்களைச் செய்பவர் மேனமையாளராயப் விளங்குகின்ருர். Great deeds are reserved for great men. (Cervantes) அரிய செயல்கள் பெரிய மனிதர்களுக்காக அமைந்துள் ளன என்னும் இது இங்கே அறியவுரியது. சிறந்த கருமங்களைச் .ெ ச ப் து முடிப்பவர் உயர்ந்த மேலோராய் ஒளி .ெ ப ற் று கிற்கின்ருர். ஆற்றும் வினை வழியே எற்றங்கள் ஏஅறுகின்றன. ஊக்கி வினைசெய்; ஆக்கம் உன்னே நோக்கி வரும். 864. ஊக்கம் எனும்சொல் உயிரின் உயர்ச்சியை நோக்கி அமைந்துள்ள நுண்மையால்-ஊக்கம் உடையான் உயிரை யுடையான் ஒழிந்தான் கடையாய் இழிவன் கழிந்து. )صو( இ-ள். ஊக்கம் என்னும் சொல் உயர்க்க பொருளுடையது; உயி ரின் உயர்ச்சியாய் அது ஒங்கியுள்ளது; அதனையுடையவன் எ வ் வழியும் உ ய ர் ங் து செவ்வையாய்ச் சிறந்து திகழ்கின்ருன்; இழந்தவன் யாண்டும் கடையாய் இழிந்து கழிகின்ருன் என்க. உலக வாழ்வில் மனிதரிடம் பல வகையான உயர்வு காழ்வு களைக் காண்கின்ருேம். புறத்தே விரிவாகத் தோன்றுகிற காட்சி களுக்கெல்லாம் அகத்தே சரியான காரணங்கள் மறைந்திருக் கின்றன. சீவிய மருமங்கள் யாவும் கூர்ந்த சிந்திக்கத்தக்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/433&oldid=1327834" இலிருந்து மீள்விக்கப்பட்டது