பக்கம்:தரும தீபிகை 6.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆ ற் றல் 1967 செயல் செய்வதே அரசருக்கு உரிய கடமையாம். நல்ல வசதி கள் அமையாது போயினும் உள்ளமே துணையாய் ஊக்கி வினை செய்யும் மன்னன் மன்னிய புகழோடு மன்னி நிற்கின்ருன். "மண்ணகன்று கன்னெயின் ங்ேகி வனம்புகுந்து பண்ணும் தவத்திசைந்த பார்த்தன்தான்--- எண்ணிறந்த மீதண்டர் கோன்குலையும் வெய்யோர் குலம்தொலைத்தான் கோதண்ட மேதுனேயாக் கொண்டு.” (தண்டி) அரசை இழந்து கிளைகளை நீங்கிக் காடு புகுந்திருந்தும் அருச்சுனன் அசுரர்களைத்தொலைத்து அமரர்களைக் காத்தருளினன். யாதொரு து ணே யு ம் இல்லாமல் ஒரு வில்லைக் கொண்டு கன் உள்ளமே துணையாச் சென்று அரிய செயல் ஆற்றிப் பெரிய புகழ் பெற்ருன். விசயன் என்னும் பேருக்குத் தக்கபடி அதிச யங்களைப் பெற்று உலகம் துதி செய்ய நின்றன். அரச குலத் தில் தோன்றிய வேந்தர் யாவரும் அந்த விரன் போல் வினை யாண்மை புரிந்து யாண்டும் மேன்மை அடைய வேண்டும். -44 775 முயற்சி யுடையார் முதுநீ ருலகில் ■■ உயர்ச்சி அடைவர் ஒழிந்தார்-இகழ்ச்சிமீக் கொண்டு பழிவறுமை கூர்ந்து சிறுமைதுயர் கண்டு கழிவர் கலுழ்ந்து. (டு) இ-ள் முயற்சியுடையவர் உலகில் உயர்ச்சி அடைந்து ஒளி மிகுந்து விளங்குவர்; அதனையிழந்தவர் இகழ்ச்சி படிந்து இழி வறுமை கள் தொடர்ந்து அழிது யாங்களில் அழுந்தி ஒழிவர் என்க. உயர்வு இழிவுகள் உணர வந்தன. உலக மக்கள் பலவகை நிலைகளில் யாண்டும் நிலவியுள்ள னர். எல்லாரும் உண்ணுகின்றனர்; உடுக்கின்றனர்; வசிக்கின் றனர். ஆகவே உணவு உடை உறையுள்கள் மனிதசமுதாயத்தின் அவசிய தேவைகளாய் எங்கும் மருவி நின்றன. நிற்கவே யா வரும் அவற்றைத் கேடவும் சுகிக்கவும் ஒடி அலைய நேர்ந்தனர். இயற்கைவிளைவுகள் அதிசய மருமங்களாய் பருவியிருக்கின்றன. மனிதன் செய்துவரும் வினைக்கு ஆள்வினை என்று பெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/44&oldid=1327422" இலிருந்து மீள்விக்கப்பட்டது