பக்கம்:தரும தீபிகை 6.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. த ர ம் 2263 மடி என்பது மனிதனை உயிரோடு மடியச் செய்கிற கொடி ய நோய். அதனை ஒருவன் தழுவ நேர்ந்தால் அவன் குடி அடி யோடு அழிந்துபோம். இழிவுகள் யாவும்.அவனைக் கழுவி நிற்கும். மடிமை குடிமைக்கண் தங்கின் ஒன்ர்ைக்கு அடிமை புகுத்தி விடும். (குறள், 608) சோம்பல் ஒருவன் குடியுள் புகுந்தால் அது மிடி வாய்ப் பட்டு மடிந்தபோம்; அவனும் விரைந்து பகைவர்க்கு அடிமை யாப் இழிந்து போவான் என இது உணர்த்தியுள்ளது. சோம்பி இராதே; எவ்வழியும் செவ்வையாய் முயன்று வாழ் என மனி கனுக்கு இனிது போதிக்க நேர்ந்த தேவர் மடியால் சேரும் குடி கேடுகளை இவ்வாறு விழி தெரிய விளக்கித் தெளிவுறுத்தியிருக் கிருர். காளாண்மை ஒழியின் ஆளாண்மை அழியும். கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தாள் இலான் குடியேபோல் தமியவே தேயுமால். (கலி, 149) முயற்சியில்லாதவன் குடி கானகவே தேய்ந்துபோம் என் லும் இது இங்கே கூர்ந்து உணரவுரியது. காள் = முயற்சி. கால் மனிதனுக்கு உறுதி கருகிறது; அகனல் எங்கும் நல மாப் சடங்து கிரிகிருன்; அது இல்லையானல் அவன் முடமாய் ஒடுங்கிக் கிடப்பான்; தாள் மனிதனுக்கு எப்படியோ, அப் படியே வாழ்வுக்கு முயற்சி உறுதியாயுள்ளது. இந்த உண் ETTP LГ) бол АС / துண்மையா உணர்ந்து கொள்ளவே முயற்சிக்குத் தாள் என்று ஒரு பெயரைப் புகழ்ச்சியா மேலோர் புனைந்த தங்துள் ளனர். ஒடி உழைப்பவன் பீடும் திருவும் ஒருங்கே பெறுகிருன், காரியம் புரிந்து வரும் அளவு மனிதனிடம் விரியம் சுரங் து வருகிறது. அதனைக் கைவிட்டுச் சோம்பி யிருப்பவன் மதியும் மாண்பும் இழக் து கதிகெட்டவனப்க் கழிந்து இழிகின்ருன். கருமம் புரிவதில் கருமம் மருமமாய் விளைகிறது. உள்ளம் ஒருமுகமாய் ஊன்றி வேலைசெய்யுங்கால் உயிருணர்ச்சி அங்கே உயர்வாய் ஒளி பெறுகின்றது. செயலிழக்க நின்ருல் உயர்வுகள் ஒழிந்து போகின்றன; இழிவுகள் எதிர்ந்து நேர்கின்றன. “Life is Act, and not to Do is Death... (Morris) செயல் உயிர் வாழ்வாம்; செப் பாது கிற்றல் சாவாம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/440&oldid=1327841" இலிருந்து மீள்விக்கப்பட்டது