பக்கம்:தரும தீபிகை 6.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2268 த ரும தி பி கை கொண்டால் உன் குடி அடியோடு அழிந்து போம்; அந்த அழிவு சேராமல் விழி திறந்து விரைந்து முயன்று வாழுக என மனிதனுக்கு இங்கனம் உறுதிகலனை இனிது போதித்துள்ளார். வறுமை இழிவு பழி முதலிய துயரங்கள் யாவும் மடியின் அடியாகவே வருகின்றன. மடிபடியின் குடி அழியும் என்றக ல்ை அதன் கொடிய கேடுகள் யாவும் நேரே தெரியலாம். Sloth brings in all woe. [Gower] துக்கங்கள் எல்லாம் மடியால் வருகின்றன என இது குறித் திருக்கிறது. சோம்பல் ஒன்ருல் துயரங்கள் பலதோன்றுகின்றன. A lazy man is necessarily a bad man; an idle is necessarily a demoralized population. . (J. W. Draper) சோம்பேறி கட்டாயம் கெட்டவனுகிருன்: ஆகவே ஒரு சோம்பல் சன சமுதாயத்தைக் கேடாக்கிப் பாழ்படுத்தி விடுகி றது என்னும் இது இங்கே ஊன்றி உணர வுரியது. I live an idle burden to the ground. [Iliad] பூமிக்குப் பாரமான ஒரு சோம்பேறியாய் நான் வாழு கிறேன் என இது கூறியிருக்கிறது. கீரிஸ் தேசத்தப் பெரிய கவிஞரான ஹோமர் Homer மடியின் கொடிய இழிவை இவ் வாறு விளக்கியிருக்கிருர். சோம்பலை எங்க டு ம் இகழ்ந்து வெறுத்திருக்கலை இவற்ருல் நன்கு அறிந்த கொள்ளுகிருேம். சிறக்க பிறவியை அடைந்திருந்தும் அகன் பயனை விரைந்து பெருகபடி மனிதனை மடி ஈனமாத் தாழ்த்தி நிற்றலால் اتنی (ع۔ மிகவும் கொடிய கேடு என வெறுக்கப் பட்டது. தன்னே உண் டவரை நஞ்சு கொல்லுதல் போல் மடியும் தன்னைக் கொண்ட வரைக் கொன்.று விடுதலால் விடம் என அறிஞர் அதனை அஞ்சி யுள்ளனர். கஞ்சு உயிரை உடலிலிருந்து நீக்கி ஒழியும்; மடி உயிரோடு வைத்துக் கொண்டே அவனைச் சித்திரவதை செப்து செக்க சவமாக்கி விடும். உயிரழிவும் துயரும் விழிதெரிய வந்தன. குடிகேடான கொடிய இந்த மடியை அடியோடு நீக்கி மனிதன் ஊக்கமாய் முயன்ற போது தான் உயர்ந்த ஆக்கங் களைப் பெறுகிருன். சோம்பியிருந்தவன் கேம்பி அழிகின்ருன்; ஊக்கி முயன்றவன் மேலான பாக்கியங்களை விரைந்து அடைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/445&oldid=1327846" இலிருந்து மீள்விக்கப்பட்டது