பக்கம்:தரும தீபிகை 6.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. த ர ம் 227 3 விர ன் என உலகம் அவனே உவந்து புகழும்படி ஆக்குகிறது. உள்ளக்கிளர்ச்சியான அந்த நல்ல நீர்மை இல்லையானல் மணி தன் உயிர் இருந்தும் இல்லாதவனப் எங்கும் எள்ளப்படுகிருன். ஊக்கம் பேணி ஆக்கம் கானுக. 870. ஒத்த பிறப்பில் உதித்தும் பலரிழிந்து செத்த சவமாய்த் திரிகின்ருர்-தத்தம் இயல்பின் அளவே எவர்க்கும் உலகில் உயர்வும் இழிவும் உணர். (ίδ) இ-ள். மனித மர்பில் ஒரு நிகரா உருவம் பிறந்திருந்தும் ஒத்த ք-հ மைகளை உணராமல் பலர் செத்த சவங்களாகவே திரிகின்ருர்; அவரவருடைய செயல் இயல்களின் அளவே உயர்வும் தாழ்வும் உளவாம்; அந்த உண்மையை உணர்ந்து நன்மையை அடைக. சிறப்பான தோற்றம் பிறப்பு என வந்தது. உடல் உறுப்புக்களாலும், கடை உடை பாவனைகளாலும், பேச்சு வழக்காலும் மனிதர் ஒரு நிகராப் க் கோன்றிலுைம் குன வகைகளால் மாறு பாடி மண்டி வேறு பட்டு விரிந்து பிரிந்து திரிந்து வருகின்றனர். உள்ளப்பண்பும் உணர்வு நலனும் உரி மையாய்ப் பெருகி வரும் அளவே மனிதன் பெருமையாப் மருவி வருகிருன்; அவ்வாறு வராவழி எவ்வாற்ருனும் அவன் இழிந்தே போகிருன். இழிவுரு மல் எழுபவன் விழுமியனகிருன். உயர்ந்த வாழ்வுகளை அடைந்து சிறந்த சுக போகங்களை து கர்ந்து மேன்மையாப் வாழ வேண்டும் என்றே மாந்தர் யாவரும் விரும்புகின்றனர். காம் விரும்பிய கலங்களை விரும்பிய படியே அடைய வுரிய கருமங்களைக் கருதிச் செய்யின் அவை காமாகவே அவரிடம் வங்கடைகின்றன. உரிய வினைகளை உரிமை யோடு ஊன்றிச் செய்யாதவர் ஒரு பலனையும் அடையாமல் . :ளனமாயுழல்கின்றனர். இழிவு ஈனங்கள் எல்லாம் மடி மடமை ளால் மருவி வருகின்றன. அகத்தே மூடம் ஏறப் புறத்தே 'கடகள் ஏறிப் பிழைபாடுகள் மீறுகின்றன. பனித வாழ்வு பொருளால் இனிது கடந்து வருகிறது. அங் கப் பொருள் முயற்சியால் விளைகிறது. செல்வங்களே ஆக்கிய 285

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/450&oldid=1327851" இலிருந்து மீள்விக்கப்பட்டது