பக்கம்:தரும தீபிகை 6.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2282 த ரு ம தி பி ைக திருக்க அம்மலர்களை நோக்கி இக் குலமகனுடைய நிலைமைகளை யெல்லாம்கினைந்து உருகி அவர் மறுகிப்பாடினர். அயலே காண்க. "இளேயோர் சூடார்; வளையோர் கொய்யார்; கல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான்; பாடினி அணியாள்; ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லேயும் பூத்தியோ ஒல்லையூர் காட்டே." (கீரத்தனர்) இக்க உபகாரி மாப்ந்த பொழுது அங்க காட்டு மக்கள் துக் கம் படிந்திருந்த நிலையை இப்பாட்டு நன்கு காட்டியுள்ளது. முல்லைக் கொடியைப் பார்த்து தம் உள்ளத்துயரைப் புலவர் வெளிப் படுத்தியுள்ள இதில் இந்த வள்ளலுடைய நீ ர் ைம சீர்மைகளைக் கூர்மையா ஒர்ந்து நாம் தேர்ந்து கொள்ளுகிருேம். மனித சமுதாயத்தில் உபகாரி புனிதமாய் மகிமைப் பெறு கின்ருன்; உலகம் அவனைத் திலகமா உவந்து கொண்டாடி வரு கிறது. மன்னுயிர்க்கு இகம் செய்து உன்னுயிரை நீ உயர்த்திக் கொள்க. அவ்வாறு உயரின் எவ்வழியும் திவ்விய இன்பமாம்.

  • ====

873. உள்ளம் இரங்கி உவந்துதவி யாதொன்றும் விள்ளாமல் கள்ளி வெளியகன்ருன்-வெள்ளமெனத் தந்துதவும் அல்லாமல் தான்மாறு வேண்டுமோ நந்தா முகில்பின் கயங்து. (க) இ-ள். கள்ளி என்னும் வள்ளல் புலவரைக் கண்டு உள்ளம் உவந்து நல்ல பொருள்கள் எல்லாம் நல்கித் தன் பெயரையும் சொல்லா மல் பெயர்க் த போனன்; மேகம் உலகில் நீரைப் பொழிந்து விட்டு வேறு யாதம் வேண்டாது மீண்டு போதல் போல் அந்த ஆண்டகை செயல் மாண்போடு அன்று விளங்கி நின்றது என்க. சீரிய உதவியின் சீர்மை நீர்மைகள் தெளிவாத் தெரியக் கார்முகில் இங்கே நேர்முகமா நெறியே காண வந்தது. ஈகல் அரிய செயல். அதனை இயல்பாக உடையவரிடம் உயர்வான பண்புகள் ஒளி செய்துள்ளன. தருந்தன்மையாள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/459&oldid=1327860" இலிருந்து மீள்விக்கப்பட்டது