பக்கம்:தரும தீபிகை 6.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2286 த ரும தி பி ைக கிருன். சிறுமை பெருமைகள் அவரவருடைய செயல் இயல் களால் வெளியே தெளிவாத் தெரிய நேர்கின்றன. தான் உண்டு களிப்பதையே எவ்வழியும் கண்டு, கனக்கே சுகங்களையும் உயர்வுகளையும் தேடி, யாண்டும் தன்னலமே காடி 'ஒடி புழல்கின்ற மனித இனத்தில் பிறர் நலக்கை நாடுகின்ற வரைக் காணுதல் மிகவும் அரிதாம். அவ்வாறு அ ரி ய நிலையில் தெரிய வருகிற உபகாரிகளையே வள்ளல் என உலக உள்ளங் கள் உவந்து புகழ்ந்து உரிமையோடு போற்றி வருகின்றன. அதிகமான் என்னும் குறுநில மன்னன் பெரிய உபகாரி. அவனுடைய மலையில் கரிய நெல்லிக்கனி ஒன்று அருமையாப் பழுத்திருந்தது; அது அமிர்தின் தன்மை அமைந்தது; பல ஆண்டு களுக்கு ஒருமுறை தோன்றுவது, அதனை உண்டவர் உயர் நலம் உடையாய் நீண்ட காலம் உயிர் வாழ்ந்து வருவர். தெய்வ அமு தம் போல் சிறந்திருந்த அத்தீங் கனியை உரிமையோடு இவன் எய்தியிருந்தான். உண்ண வுரிய சமையம்நோக்கி இருக்குங்கால் அங்கே ஒளவையார் வந்தார். அந்த அம்மைக்கு அதனை உவங்து தந்தான். அவள் வியந்து மகிழ்ந்தாள். இவனது உண்மையான வண்மையை அவள் எண்ணி உருகிக் கண்ணிர் மல்கிக் கனிந்து பாடினள். கவியின் சுவை கனியின் நிலையை விளக்கியது. பூங்கமல வாவிசூழ் புள்வேளுர்ப் பூதனேயும் ஆங்கு வரு பாற்பெண்ணே யாற்றினேயும்--ஈங்கே மறப்பித்தாய் வாள்அதிகா! வன் கூற்றின் காவை அஆறுப்பித்தாய் ஆமலகம் தந்து. (ஒளவையார்) அரிய அமுகக் கனியைத் தனக்கு உண்ணத்தந்து உயிரு தவி செய்துள்ள அதிகன ஒளவையார் இவ்வாறு புகழ்ந்திருக் கிரு.ர். ஆமலகம் = நெல்லிக்கனி. என் நாவுக்கு இ னி ய கனி தங்காய்; எமன் நாவை அறுக்காய்! என்று அவனுடைய கொடை விரங்களை ஒருங்கே வியந்து துதித்திருக்கும் இது உவந்து உணர வுரியது. அதிகன் அளித்த அரிய கனியால் பெரிய சீவியத்தை யடைந்து ஒளவை கெடிது வாழ்ந்துள்ள நிலை தெரிய வந்தது. 'கமழ்பூஞ் சாரல் கவினிய கெல்லி அமிழ்துவிளே தீங்கனி ஒளவைக்கு ஈந்த உரவுச்சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல் அரவக்கடல் தானே அதிகன்.” (சி.ஆறுபாண்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/463&oldid=1327864" இலிருந்து மீள்விக்கப்பட்டது