பக்கம்:தரும தீபிகை 6.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. உ ர ம் 2287 கல்லூர் நத்தத்தனர் என்னும் சங்கப் புலவர் இங்ங்னம் பாடியிருக்கிருர். அதிகன் செய்தது அதிசய நிலையது ஆதலால் உலகம் அதனை உவந்து துதி செய்து வருகிறது. அந்தக் கனியை அவன் உண்டிருக்கால் இந்த இனிய புகழ் அவனுக்கு வந்திராது. உண்ணுகின்ருன் தன்னுடலே ஒம்புகின்ருன்; ஊருண்ணப்" பண்ணுகின் ருன் பாக்கியங்கள் பண்ணியே---எண்ணரிய புண்ணியங்கள் ஆக்கிப் புகழோங்கி கிற்கின் ருன் எண்ணி யுணர்க இதை. isi இதனேக் கருதி நோக்கி உறுதி நலங்களை ஒர்ந்து உணர்ந்து கொள்ளவேண்டும் கன் வயிற்றையே நிரப்பி வருபவன் உட லைக் கொழுக்க வளர்த்த முடிவில் சுடலையில் தள்ளி விட்டு ஒரு பலனும் காணுமல் பழிகிலேயில் இழிந்து ஒழிந்து போகின்ருன். தனக்குக் கிடைத்ததைப் பிறர்க்கும் உண்ண உதவிக் கண்ணி யமா ஊட்டியருள்பவன் புண்ணியவானப் உயர்ந்து புகழோடு பொலிந்து என்றும் சிரஞ்சீவியாப் கின்று விளங்குகின்ருன். உடலைப் பெருக்கி ஊனமாய் ஒழிவது ஈன வீழ்வாம்; உயிரை உயர்த்தி ஒளி செய்து நிற்பது தெளிவான ஞான வாழ்வாம். சிறந்த மனிதன் எனப் பிறந்துள்ளவன் இறந்து போகு முன் எய்த உரியதை விரைந்து அடைந்து கொள்ள வேண்டும். ஈதல் அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை எனக் கேவர் குறித் திருப்பது கூர்ந்து சிந்தித்து ஒர்ந்து உணர்ந்து கொள்ளத்தக்கது. ஈகையால் புகழும் இன் பமும் உளவாகின்றன; ஆகவே அது சீவ அமுதம் என நோக்கது. மாட்டின் எருவைக் காட் டில் இட்டால் அது சிறந்த உரமாய் நிறைந்த விளைவுகளை நேரே கருகிறது: நீ ஈட்டிய பொருளே எளியவர்க்கு ஊட்டினல் அது உயர்ந்த கருமமாய் உனக்கு அரிய பல கலன்களை அருளுகிறது. உலக வாழ்வின் உண்மை நிலைகளை உணர்ந்தவனே உதவும் கன்மையாளயைப் உயர்ந்து வருகின்ருன். அரிய ஈகை பெரிய மனிதனது நீர்மையாய் மருவியுளது. மனிதனுடைய நல்ல அறி வுக்குப் பயன் பிறிதின் நோயைக் கன் நோய் போல் கருதி நீக் கும் உறுதியுடையதாம். மெய்யான அறிவு மேலான உதவியில் மேவியுள்ளது. உயிர்க்கு உய்தி செய்வதே உண்மை உணர்வாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/464&oldid=1327866" இலிருந்து மீள்விக்கப்பட்டது