பக்கம்:தரும தீபிகை 6.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1970 த ரும தீபிகை நயத்தகு போகம் அளித்திடான் என்ன நானிலத்து அறிஞர் நன்கு உரைப்பர் உயத்தகு நெறிமால் அடியுனல் என்றே ர்ைக் கமா தவப்பெருங் கடலே! (குசேலோபாக்கியாகம்) முயற்சி செய்தவனுக்கே திருமகள் கணவன் எல்லா இன்ப நலன்களையும் உவந்து அருளுவன்; அது செய்யாதவனுக்கு அவன் யாதும் செய்யான் என இது குறித்திருக்கிறது. வினையா ளனைத் தெய்வமும் விழைந்துவரும் என்பது தெளிந்து கொள்ள வந்தது. உரிய வினை செய்ய அரிய பயன்கள் விளைகின்றன. உலக மக்களுக்குத் தலைமை அதிபதியாய் அரசன் அமைந் திருத்தலால் தன் பொறுப்பை உணர்ந்து கருமங்களைக் குறிப் போடு கூர்ந்து செய்து தேர்ந்து தெளிந்து வர வேண்டும். மாந்தர் எங்கும் மகிழ்ந்து வாழ ஒர்ந்து வினை புரிபவனே செங்கோல் வேந்தனுய்ச் சிறந்து திகழ்கிருன்; அங்கனம் செய் யாதவன் வெங்கோலனப் விளித்து போகிருன். உரிய ஆதரவு பிழைபடின் கொடிய வேதனைகள் விளைந்து நெடிய பழிகள் நிறைந்து விடுகின்றன. பாதுகாவலே நீதிகளாகிறது. வேந்தன் உலகை மிகநன்று காப்பது வாய்ந்த மனிதர்கள் அவ்வழியா நிற்பர்; பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப் பாய்ந்த புலியன்ன பாவகத்தானே. (திருமந்திரம், 245) தன் கடமையைச் செய்து காவாமல் வேங்கன் கொடுமை செய்ய நேர்ந்தால் புலியைக்கண்ட புல்வாய்கள் போல் குடிகள் திகிலடைந்து வருந்துவர் எனத் திருமூலர் இவ்வாறு குறித்திருக் கிரு.ர். யாண்டும் ஆள்வினையாளனய் கின்று ஆட்சியைக் கருதிக் காத்து அரசன் உறுதி செய்து வர வேண்டும் என்பது கருத்து. 776 சீரும் திருவும் சிறப்பும் பிறவுமெலாம் நேர நினைந்து மீள்கின்ருய்-சேரும் வகையறிந்து செய்யின் வருமே அனைத்தும் தொகையாய் முயன்று தொடர். - (சு) இ-ள் செல்வம் கீர்த்தி சிறப்பு முதலிய எல்லா மேன்மைகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/47&oldid=1327425" இலிருந்து மீள்விக்கப்பட்டது