பக்கம்:தரும தீபிகை 6.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2298 த ரு ம தி பி ைக அந்த மறப்பு இயற்கையாப் நிகழ்ந்து வருகிறது. உலகத்தார் உள்ளங்களில் என்றும் நிலையாப் கிலைத் து வருகிலை அரிய பெரிய செயல்களால் மருவுகின்றது. அருமையான மகிமையாளரை கினேந்து மகிழ்ந்து உலகம் உரிமையோடு புகழ்ந்து வருகிறது. வள்ளல்கள் உயிர்கள் இன்புற உதவி வருகலால் உலக உள் ளங்கள் அவரை பாண்டும் மறவாமல் கருதி மகிழ்கின்றன. பாரி இறந்து போப்ப் பதினெட்டு நாற்ருண்டுகள் ஆகின் றன. இன்றும் இவனை எல்லாரும் எண்ணி ஏத்துகின்றனர். இவ்வாறு கருதி வருகற்குக் காரணம் என்ன? இவனது இனிய உபகார நீர்மையே. இவன் ஒரு சிறிய அரசன். முந்நூறு ஊர் களுக்குத் தலைவன்; பாண்டி மண்டலத்தில் பிரான் மலை என்னும் ஊரிலிருந்து சிரோடு ஆண்டு வங்தான். வண்மை யோடு நல்ல திண்மையும் உடையவன். யார் வங்காலும் உள்ளம் உவந்து உதவி வந்தான் ஆதலால் இவனுடைய புகழ் எங்கும் பரவி நின் றது. பேரரசரினும் இவன் பேர் யாண்டும் பெருமகிமையாயப் நீண்டு நிலவியது, நிலவவே சேரன் சோழன் பாண்டியன் என் லுல் மூவேக் கரும் இவன் மேல் பொருமை கொண்டார்; முடி வில் போராட மூண்டு படைகளோடு வந்து ஊரை வளைந்து தேரோடு செருக்கி அமருக்கு வரும்படி அடங்கொண்டு நின்ருர். இவனும் அவரோடு போராட நேர்ந்து பொங்கி எழுந்தான். அ.த பொழுது ஆகினப் புலவசாயப் அங்கேயிருந்த கபிலர் இவனைத் தடுத்து நிறுத்தி ஊரை முற்றுகை செய்துள்ள மூவரசரையும் நேரே போப்ப் பார்த்தாள். கிலைமைகளை உரைத்தார். பெரிய அரசராகிய நீவிச் செடிய சேனைகளோடு ஈண்டு மூண்டு போரா டவந்திருக்கிறீர்கள். டாரி கிலே இது பொழுது பரிதாபமாயுளது; உரிய பெருள்கள் யாவும் இர வலர்க்குக் கொடுத்த விட்டு வறிய நிலையில் இருக்கிருர்; ஆயினும் அவகா நீங்கள் பொருத வெல்ல முடியாது. நீவிரும் இரவலராப் மாறிப் பரிசில் பெற கேரின் எதையும் பெற்றுக் கொள்ளலாம். அவரை ஒல்லையில் வெல்ல வேண்டுமானுல் இந்த வழியே நீங்கள் செல்லவேண்டும்’ எனக் கவிஞர் தய மாச் சொல்லியருளினர். ட கையாப்ப் போராட வங் துள்ள அங்க வேக் கரை நோக்கி அன்று அவர் கூறிய பாட்டு கூரிய சீரிய பண்பாடுகளுடையது. அயலே வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/475&oldid=1327878" இலிருந்து மீள்விக்கப்பட்டது