பக்கம்:தரும தீபிகை 6.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2300 த ரும தீ பி ைக யிர்க்கும் இன்பம் கருகலால் அதனைச் செய்பவன் எவ்வழியும் திவ்வியமகிமைகளே அடைந்து கொள்கிருன் என்றும் அழியாக புகழ் ஈகையில் உள்ளது; அதனைப் பேணிப் பெருமை பெறுக.

  • ==

879. வள்ளல் உயர்வீரர் மாய்ந்தாலும் மாநிலத்தோர் உள்ளமெலாம் என்றும் உளராவர்-எள்ளலுறு பற்றுள்ளம் கொண்ட படுபிசுனர் பேடியரீண்டு உற்றிருந்தும் செத்தார் உணர். (கூ) இ-ள். கொடையாளிகள் வீரர்கள் இறந்த மறைந்தாலும் உலகத் தாருடைய உள்ளங்களில் எல்லாம் என்றும் கிரந்தரமாப் நிலைத்து நிலவுகின்ருர், உலோபிகள் பேடிகள் உயிரோடு இருந்தாலும் செத்தவராய் இழிந்து சீரழிந்து கழிகின்ருர் என்க. இக்க உலகில் உயிரினங்கள் பிறந்து வருதலும் இறந்து போகலும் கிரந்தரமாய் நிகழ்ந்து வருகின்றன. எல்லையில்லாத படி எண் இறங்க சீவகோடிகள் யாண்டும் கோன்றி மறைத லால் இவ்வுலக வாழ்வு மாயத் தோற்றம் என் நேர்ந்தது. வானவில், மேகமின், நீர்மேல் குமிழி என மனித வாழ் வின் கிலேகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள இவ்வாறு உவ மானங்கள் வந்துள்ளன. விரைந்து அழிந்து போகும் நிலையில் பிறந்துள்ள ம னி ன் என்றும் அழியாக புகழை அடைந்து கொள்ளின் அவன் விழுமிய பாக்கியவாளுய் விளங்கி நிற்கின் முன். அரிய புகழை அடைவதில் கொடையும் விரமும் உரியவுறவு களாப்மருவியுள்ள ன.இசையின் ஒளிகள் இவற்றுள் விசுகின்றன. உண்மையான வண்மையும் விர மும் ஒருங்கே அமைந்திருங் கமையினலே கான் கன்னன் உன்னதமான கீர்த்தியில் ஒளி பெற்று மிளிர்கின்ருன். இவனுடைய ஈகையும் தீரமும் விவேக மும் வீரப்போரும் யாரும் வியந்து போற்றும் அதிசய நிலையின. கொடைக்குக் கன்னன் என்னும் முதமொழி இவன் கொடுத்து வந்துள்ள அருமை பெருமைகளைக் குறித்து வந்துள்ளது. கன்னனுக்குப்பின் கொடையும் இல்லை; கார்த்திகைக்குப்பின் மழையும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/477&oldid=1327880" இலிருந்து மீள்விக்கப்பட்டது