பக்கம்:தரும தீபிகை 6.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆற்றல் 1971 வேண்டும் என்று யாண்டும் நீ ஏங்கி நிற்கின்ருப்; அவை உன் பால் வந்துசேரும் வகையை விழியூன்றி உணர்ந்து வினைசெய்து வங்கால் யாவும் ஒருங்கே விரைந்து பெறுவாய் என்பதாம். ஆசைகள் மனித சமுதாயத்தை அலைத்து வருகின்றன. அரிய பல பொருள்கள் வேண்டும் என்று யாவரும் யாண்டும் அவாவி அலைகின்றனர். கருதிய பொருள் கிடைத்தால் மேலும் அதிகம் பெற விழைந்து சாலவும் கவிக்கின்றனர். பெற்றதில் 'சை குறைகிறது; பெருகதில் ஆசை விரிகிறது. ம்ானச மரு பங்கள் அதிசய விசித்திரங்களாய்ப் பெருகி கிற்கின்றன. மேலான ఊడి ఊడిr அடைய வேண்டும் என்று உள்ளத்தில் முண்டு எ ழுகின்ற விருப்பங்களே மனிகரை உலகத்தில் உயர்ந்து விளங்கச் செய்கின்றன. கருதிய நினைவுகள் கரும வினைகளாய் வருகின்றன. அவசிய தேவைகளை நாட நேர்ந்தவன் அதிசய சேவைகளைக் கூடநேர்ந்தான். பசி உணவை நாடச்செய்கிறது; வறுமை பொருளைத் தேடச் செய்கிறது; வெயில் நிழலைக் கூடச் செய்கிறது; துன்பம் இன்பத்தை அடையச் செய்கிறது. அல்லலான சோதனைகள் மனிதனுடைய வளர்ச்சிக்கு கல்ல் சாதனைகளாய் கிற்கின்றன. துயரம் நேர்ந்த போதுதான் யிர் உயர கேர்கிறது. துன்பம் ஒழிய இன்பம் விழைகிறது. " துன்பு உளது எனின் அன்ருே சுகம் உளது. ” (இராமா, கங்கை 69 குகனுக்கு இராமபிரான் இவ்வாறு போதித்துள்ளார். இது பொருள்ாள முடையது; கருதி உணரத்தக்கது. பு லை ய ர ன துன்ப நிலைகளைக் கண்டு நொந்தவன் நிலையான இன்பநிலைகளைக் கான விழைந்து வேணவாவோடு விரைந்து முயல்கின்ருன். சுக வாழ்வில் அழுக்திக் கிடப்பவன் நிழலின் கீ மு ன் ள பயிர்போல் வளர்ச்சி குன்றி மழுங்கிக் கிடக்கிருன். து ட ர ம் கோய்க்தால் அந்த மனிதன் துணிந்து எழுங்து எந்த வகையிலும் முயன்று யாண்டும் உயர்ந்து கொள்ளுகிருன். - “Struggle is the law of growth. ” [Philosophy] ' போராட்டம் வளர்ச்சிக்கு வளமையாயுள்ளது” என் ம்ே இது இங்கே அறிய.வுரியது. நெருக்கடிகள் சுறு சு.றுப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/48&oldid=1327426" இலிருந்து மீள்விக்கப்பட்டது