பக்கம்:தரும தீபிகை 6.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1972 த ரும தீ பி. கை களை விளக்கின்றன. நேர்ந்த இன்னல்களால் நெஞ்சம் துணிந்து முயன்று நேரே உ ன் ன த நிலைகளை அடைந்த மாங்கர் பலர். துயரத் தொடர்பால் மனிதன் உயரத் தொடங்குகிருன். “ A man reaches his full height only through compulsions, responsibilities, and suffering. * (Hegel) காரியப் பொறுப்பு, துன்பம், அவசியம் ஆகிய இவைகள் மூலமாகவே தனது பூரணமான உயர்ச்சியை மனிதன் அடை கிருன்' என ஹீஜல் என்னும் பேரறிஞர் இங்கனம் கூறியிருக் கிரு.ர். வருத்தம் வரக் கருத்து விருத்தி பெறுகிறது. நேர்ந்த அல்லல்கள் மனிதனை நேரே உந்தித்தள்ளுகின்றன. தள்ளவே அவன் துள்ளி எழுந்து உள்ளி யு ன ர் ங் து ஊக்கி முயன்று உயர்ந்து செல்லுகின்ருன். மூண்ட துயரங்களே பாண்டவர்களை நீண்ட புகழோடு நிலைத்திருக்கச் செய்தன. இராமன் அயோத்தியில் சக்கரவர்த்தியாய் அமர்ந்திருந் தால் அவனது உக்கிர விர கிலே உலகத்துக்குத் தெரியாமல் போயிருக்கும். அரசு முடி துறந்து அடவி புகுந்து அல்லல் பல அடைந்தமையால் எல்லையில்லாத அதிசயங்களை அவன் செய்ய நேர்ந்தான். வானும் வையமும் வணங்க மான வீரனப் கின்ருன். * கடனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்பக் கோல் துறந்து கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் காத்த கழல் வேந்து.' எனக் கோதண்ட வீரன் புகழ் ஓங்கி நிற்கின்ருன். வேந்து, கழல் வேந்து, கான் கடக்க வேந்து, கடல் கடக்க வேந்து, காத்த வேந்து, இடுக்கண் காத்த வேந்து, இமையோரைக் காத்த வேந்து எனக் கூர்ந்து நோக்கி ஆர்க்க சுவைகளை ஒர்ந்து உணர்ந்து கொள்ளவேண்டும். உண்மையான வேந்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதை இ ர | ம ன் ஒழுகிக் காட்டி யிருக்கிருள். விழுமிய ஒழுக்கம் வியப்புகளை விளைத்துள்ளது. வெய்ய தீமைகளை ஒழித்து வையத்தைப் பாதுகாத்து மாங் தர் யாண்டும் மனம் மகிழ்ந்து வாழ்ந்துவரச் .ெ ச ப் வ .ே த வேந்தன் கடமையாம் என எங்கும் விளக்கியு ள்ளான். இக் கோமகனுடைய அறிவும், ஆற்றலும் பரிபாலன முறைக்கே உரி மையாய் கின்று வேக்கருக்கு விரிந்த போதனைகளைச் செய்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/49&oldid=1327427" இலிருந்து மீள்விக்கப்பட்டது