பக்கம்:தரும தீபிகை 6.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1978 த ரும தீ பி ைக ஞாலத்தை ஆள நேர்ந்த மன்னன் காலத்தை வரைந்து கொண்டு கருமத்தைச் செய்துவரின் அக்க ஆட்சி அரிய பல மாட்சிகளை அடைந்து விளங்கும். காலம் வறிகே கழிய விடின் அவ் வாழ்வு. பரிதாபமாய் இழிந்து பழியோடு பாழ்படுவதாம். “Every hour frittered away means unrelieved human misery.” [Kirby page] :வினே கழிகிற ஒவ்வொரு கணமும் மனித சமுதாயத் தின் துயரை நீக்காத பழியுடையது” என்னும் இது இங்கே கருதி யுனா வுரியது. அரசனுக்கு அமைந்த நேரம் உலகைப் பாதுகாக்கும் உரிமையுடையது. உயிரினங்கள் துயர் உருதபடி இனிது பேண வுரிய அரிய பொழுகை வறிதே கழியவிடின் பெரிய பழியாம். ஆதலால் அவ்வாறு கழியாமல் எவ்வழியும் செவ்வையா அதனைப் பயன் படுத்தி வரவேண்டும்; அவ் வர வால் அரசுக்குஅரிய பெரிய மகிமைகள் யாண்டும் உளவாம். 778. பொருளும் புகழும் பொருந்த விழைவார் மருளும் மடியும் மருவார்-தெருளுளத்தே கொண்டு முயல்வார் குலேயார் கிலேஎன்றும் கண்டு மகிழ்வார் கதி. (அ) - இ-ள் பொருள் புகழ் முதலிய உயர் நலங்களை அடைய விரும்பு பவர் மருள் மடி முதலிய இழிவுகளை மருவார; உள்ளம் தெளிந்து ஊக்கி முயன்று உயர்ந்த கதிகளைக் கண்டு மகிழ்வார். T

  • - உயர்வான நிலைகளை அடைய உரியவரது இயல்புகளே இது இனிது விளக்கியுளது. மானச மருமங்கள் மதியூகமாய்க் கான வுரியன. மனம் புத்தி சித்தங்கள் வித்தக நிலைகளில் விரிந்து கிற்கின்றன. எண்ணம் விளைய எல்லாம் விளைகின்றன.

மனநினைவுகளால் மனித உலகம் யாண்டும் இனிது இயங்கி வருகிறது. வெளியே விரிந்து நிகழுகிற தொழில்கள் எல்லாம் உள்ளே யிருந்து கிளர்ந்த எண்ணங்களாலேயே இசைந்து திகழ்கின்றன. கருதி முயன்ற அளவு உறுதி நலன்களே மனிதன் அடைந்து வருகிருன். தனக்கு வேண்டிய இதங்களை நீண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/55&oldid=1327434" இலிருந்து மீள்விக்கப்பட்டது