பக்கம்:தரும தீபிகை 6.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1982 த ரும தீபிகை உண்னுகின்றமனிதன் தனது உணவுக்கு உரிய கடமையை உணர வேண்டும். சிறந்த அரசன் ஆயினும் உயர்ந்த செல்வன் ஆயினும் உழைப்பை உணர வில்லை ஆயின் பழிப்புடையராப் அவர் பாழ்பட நேர்கின்ருர் பணி புரியான் பழி புரிகின்ருன். யாதும் முயலாமல் சுகமாய் இருந்து சாப்பிடுவது அவ மான வாழ்வாம். மானம் அழிய ஈனமா வாழலாகாது. சோம்பலான பழக்கம் மனிதனைத் தீம்பனுக்கித் தேம்பச் செய்கிறது. முயற்சியை எவன் இழந்து விட்டானே அன்றே அவன் இறந்து விட்டான். ஊக்கம் உறுதி உணர்ச்சி முதலிய உயர் நிலைகள் எல்லாம் சோம்பேறியை விட்டு ஒழிந்து போ கின்றன; போகவே அவன் சாக நேர்ந்த படியாய்த் தாழ்ந்து விழ்கின்ருன். உழையாக பழக்கம் மனிதனைப் பிழையாகப் பாழ் படுத்துகிறது. உழைத்து வருவது உயிர் பெற்ற பயனுய்த் தழைத்து வருகலால் உழைப்பாளி உயர் நிலைகளில் ஒளிர்கிருன். உழைத்து உயர்ந்து வாழ உடல் வந்தது. நினைந்து நீதிநெறியே உயர மனம் வாய்ந்தது. உணர்ந்து தெளிந்து உய்தி பெற அறிவு அமைந்தது. அருமையாக அடைந்த இந்தக் கருவி கரணங்களை உரிமை யான நெறிகளில் செலுத்துவோர் பிறவிப்பயனைப் பெற்ற பெரி யாப் உயர்கின்ருர், இவ்வாறு செய்யாகார் எவ்வழியும் யாகொரு பயனும் காணுமல் அவமே இழிந்து கழிகின்ருர். உரிமையை உணர்ந்து பழகிய அளவு பெருமைகள் விளைந்து வருகின்றன; பழகாது விடின் சி.ஆமைகள் தொடர்ந்து கொள் ளுகின்றன. பழகிய பழக்க கதின்படியே மனிதன் வழக்கமாய் வளர்ந்து வருகிருன். ஒரு நாள் வேலை செய்ய வில்லையானல் மறுநாள் அதில் அவனுக்குப் பிரியம் வராது. நாளும் கருத்தோடு வேலை செய்து பழகினவன் ஒரு காழிகையையும் விண் ஆக்க மாட்டான். கரும வி. ய்ை அவன் பெரு மகிமை பெறுகிருன். மடியன், சோம்பேறி தி 5' இடியுண்டு நிற்பவர் யார்? இள மையிலேயே தொழிலில் பழகாமல் வளமையாய் அலைந்து திரிக் தவரே இழிந்த சோம் பேறிகளாய் உலகில் உயர்ந்து நிற்கின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/59&oldid=1327438" இலிருந்து மீள்விக்கப்பட்டது