பக்கம்:தரும தீபிகை 6.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1984 த ரு ம தீ பி. கை முன்புநல் வினேசெய் தவர்முயற் றின்றி முன்னிய எலாம் உண்பர் என்னில் இன்ப வாலரியே முதலுப கரணம் எலாம் இனிது உடையவர் ஏனும் வன்புறும் அடுதல் முயற்சி யில்லாமை வயிற்றெழு பசித்தழல் அவிய நன்பதம் ஆமோ மறைமுழுது உணர்ந்த கற்றவக் குணப்பெருங் குன்றே. (1) கடவுள் ஈகுவன் என்று எண்ணி கித்தியமும் கரு துறு முயற்சி செய்யானே ல் அடலுறு செல்வம் அடைகுவ னேகொல்? அருங்கலத் திட்ட பாலடிசில் - மிடலுடைக் கரத்தால் எடுத்துனது எங்கன் விங்கு வெம்பசிப் பிணி ஒழிப்பன் உடல்பவம் தனக்கு ஒராகரமாகும் உடனணி வாட்டு மெய்த் தவத்தோய்! (2) முன்பொரு கராவால் மொய் வலி சிதைந்து மும்மதக் கறையடிக் கயமும் வன்புடைப் பொன்னன் புரிகொடு மையில்ை மனமெலி பிரகலா தனனும் அன்பிைேடு ஏத்தி அழைத்தலான் அன்றே அலேகடல் வண்ணன் வந்து ஆண்டான் என் பராதலினல் முயற்சி செய் பவருக்கு எய்தரும் பொருளும் ஒன்றுளதோ? (3) (குசேலம்) ஊழ் ஊட்டும் எனினும் மனிதன் ஒயாது முயற்சி செய்ய வேண்டும்; அவ்வாறு செய்கின்ற கரும வீரனுக்கே தெய்வம் , உரிமையாய்க் துணை செய்யும் என இவை உணர்த்தியுள்ளன. கவிகளின் குறிப்பைக் கருதி உணர்ந்து கொள்ள வேண்டும். உள்ளம் தளராமல் முயன்று வருவது உயர்ந்த பண்பா டாய்க் கிளர்ந்து வருகிறது. அரிய செல்வங்களும் பெரிய மதிப் புகளும் அதனுல் விளைந்து வருகின்றன. வேங்கனுடைய ஆற்றல் வினையாண்மையால் ஏற்றம் பெற்று வருகலால் அதனைப் போற்றி வருமளவு புகழ் ஒளிகள் பொலிந்து விளங்குகின்றன. _ங்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/61&oldid=1327440" இலிருந்து மீள்விக்கப்பட்டது