பக்கம்:தரும தீபிகை 6.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆற்றல் 1985 '80. ஒன்றும் முயற்சிசெய் தொண்பொருளை ஈட்டாமல் சென்றுபிறர் பாலிரந்து சீரழிதல்-கின்றதொரு வாவியின்கண் ர்ேபருகான் வன்கானல் மேலோடி ஆவி அழிதல்போல் ஆம். (o) சொக்தமாய்த் தான் முயன்று பொருளை ஈட்டாமல் பிறரி டம் போய் இரந்து பெறுவது இழிந்த பேரிழவாம்; இனிய நீர் கிறைக்க வாவியில் புகுந்து நீர் பருகாமல் கொடிய கானலை நாடி ஒடி அழிவது போல் அது நெடிய கேடாம் என்க. சுகமும் மரியாதையும் மனிதனுக்கு மிகவும் பிரியமானவை. துக்கமும் அவமானமும் தன் பக்கம் அணுகிலும் அச்சமும் அருவருப்பும் அடைய நேர்கின்ருன். இன்பமுடன் கண்ணிய மாப் வாழ விரும்புகிறவன் அதற்குத் தகுதியாகத் தன்னைச் செய்து கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்யானுயின் அவ் வாழ்வு அவலமாயிழிந்து வெவ்விய துயர்களை அடையும். இந்த உலக வாழ்வு பொருளால் இனிமை யுஆறுகிறது. ஆகவே அதனை அடைந்து கொள்ள வேண்டியவனப் மனிதன் அமைந்து நின்ருன். உழவு வாணிகம் முதலிய தொழில்களால் பொருள்கள் உளவாகி வருகலால் அவை சீவனோபாயங்களாய் நேர்ந்தன. உயிர்கள் உண்னு கற்கு உரிய உணவுகளைப் பயிர்கள் விளைக் கருளுகலால் மனித வாழ்வுக்கு உழவு நேரே புனிதமான தொழிலாப் இனிது பேண வந்தது. உழவு உயிர் வாழ்வாயது. உண்ண நேர்ந்த மனிதன் எவனும் உழைக்க வேண்டும் என்பது இயற்கை நியமமாய் கின்றமையால் அந்த உழைப்பு களுள் உழவு தலைமையாய் அமைந்தது. உழைப்பை யுடையது உழவு எனக் காணக் குறியாய் வந்திருத்தலால் அதன் சிறப் பையும் சீர்மையையும் ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகின்ருேம். சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதல்ை உழந்தும் உழவே தலே. (குறள், 1031) உலகம் உழவால் உயிர்த்து வருகிறது எனத் தேவர் இவ் வாறு உணர்த்தி யிருக்கிருர். மெய் வருந்திக் கை முயன்று உழைக்க வேண்டுமே என்று அஞ்சி உழவுத் தொழிலை விட்டு 249

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/62&oldid=1327441" இலிருந்து மீள்விக்கப்பட்டது