பக்கம்:தரும தீபிகை 6.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1988 த ரு ம பிே கை Serenity, health, and affluence attend the desire of rising by labour; misery, repentance, and disrespect, that of succeeding by extorted benevolence. [Goldsmith] 'தன் உழைப்பால் உயர விரும் புகிறவனிடம் அமைதி சுகம் செல்வம் முதலிய நலங்கள் இயல்பாப் வருகின்றன; பிறருடைய உதவியை சாடி அபகரித்து வாழ்பவன் பால் துன்பமும் பரிதாப மும் அவமானங்களும் உளவாகின்றன” என்னும் இது இங்கே ஊன்றி உணிர வுரியது. அயலே நாடுவது அழிவை நாடுவதாம். தாகை முயன்று வ ர ழ் வ தி ல் மானம் மரியாதைகள் நிறைந்து மகிமைச் சுகங்கள் பெருகி கிற்கின்றன; இவ்வாறு முயலாமல் அயலாரை எதிர் பார்த்து யாசித்து வாழ்வதில் ஈன இழிவுகளே யாண்டும் நீண்டு இடர்கள் மூண்டுள்ளன. தன் முயற்சியால் வருவது இனிய ஊற்று நீர் போல் இன்பம் தருகிறது; பிறர் பால் இரந்து கொள்வது இ ழி ந் த சாக்கடை நீர்போல் துயரமே கரும் ஆதலால் அது எவ்வழியும் இகழ்ந்து வெறுக்கத் தக்கது. ஈனம் ஒழியின் மானம் விளையும். அறிவோடு முயன்று வருபவன் வாவி நீர் பருகுபவன் போல் ஆவி இன் புற்று வருகிருன்; அயலே யாசிக்கப் போன வன் கானல் நீரை காடி அலைந்க பேதை போல் புலையா யிழிந்து தொலையாக துயரங்களை நிலையாக அடைந்து உழல்கின்ருன். பாலைஎன்று உலர்ந்த செங்கிலங் கானல் பரப்பினேப் புனல் என ஒடிச் சாலவும் இளேத்துத் தவித்துழை யினங்கள் தனித்தனி மறுகிய மறுக்கம் மாலுளர்ந்து இருண்ட புன்மனச் சிறியோர் மருங்கினில் இரந்திரங்து இடைந்து காலறத் தேய்ந்த பலகலை மேலோர் கருத்தினில் வருத்தம் ஒத்தனவே. (சிருப்புராணம், சுரத்தில் 6) கானலைப் புனல் என ஒடி இளைத்த மான் இனங்கள் போல் கலை நலமுடைய மேலோர் புலையான புல்லரிடம் பொருளை காடி அலைந்து வருந்தினர் என இது வரைந்து காட்டியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/65&oldid=1327444" இலிருந்து மீள்விக்கப்பட்டது