பக்கம்:தரும தீபிகை 6.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- o o — — —” _ _ o எழுபத்தொன்பதாம் அதிகாரம். ஆ ட் சி அஃதாவது நாட்டை ஆளும் முறை. அரசனுடைய சிறந்த ஆற்றலுக்கு கிறைக்க பயனப் ஆட்சித்திறம் அமைந்துள்ளது; அவ்வுண்மையை உணர்ந்து கொள்ள அதன்பின் இது வைக்கப் பட்டது. அறிவு ஆற்றல்களோடு தொடர்ந்து ஆட்சி வந்தது. 281 ஆட்சி எனும்சொல் அரசனுயர் ஆளுகையைக் காட்சியுறக் காட்டிக் கதித்துளதால்-மாட்சிபல கண்டு தெளியக் கனிந்திருக்கும் அம்மொழியைக் கொண்டு தெளிக குணம். (க) இ-ன் தேசத்தை ஆளுகின்ற அரசனது வினையாண்மை ஆட்சி என அமைந்தது; அரிய பல பொருள்களை அம்மொழி மருவி யுளது; அதன் அருமையை உணர்ந்து பெருமையைத் தெளிந்து உரிமையை உவந்து செய்து கொள்ளுக என்பதாம். மனிதனுடைய எண்ணங்கள் வாய் மொழிகளால் வெளி வருகின்றன. வாழ்க்கையில் மருவியுள்ள பொருள்கள் எல்லா வற்றிற்கும் பெயர்கள் அமைந்திருக்கின்றன. யாவும் காரணம் தோய்ந்தே வந்துள்ளன. கூர்ந்து ஒர்ந்து உணரும் அறிவு மனித னிடம் இனிது அமைந்திருக்கலால் அவன் தேர்ந்து சொன்ன மொழிகள் வழி வழியே தெளிவாய் வழங்கி வருகின்றன. உலகத்தைப் பாதுகாத்தக் குடிசனங்களை ஆகரித்து முறை புரிந்து வரும் இறைமை அரசனுக்கு உரிமையாப் அமைந்திருக் கிறது. அவனது வினையாண்மை ஆட்சி என்னும் சொல்லால் மாட்சியாக் குறிக்கப்பட்டுள்ளது. ஆளும் தன்மை ஆட்சி என நேர்ந்தது. சேர வே ஆளப்படும் உலகம் அறிய வந்தது. யாரும் ஆளாக பேரின்ப நிலையம் ஆட்சியில் உலகம் என கின்றது. ' வரம்பில் இன்பத்து ஆட்சியில் உலகம். ' --- (சீவகசிந்தாமணி, 581) பேரின்ப வீட்டைக் குறித்து வந்துள்ள இது இங்கே கூர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/68&oldid=1327447" இலிருந்து மீள்விக்கப்பட்டது