பக்கம்:தரும தீபிகை 6.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. ஆ ட் சி 1993 முல்லேயும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து கல்லியல்பு இழந்து கடுங்கு துயர் உறுத் துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும். ' (சிலப்பதிகாரம், காடுகாண்காதை) தன் ஆட்சியைக் கவனியாமல் அரசன் நிலைமாறி நின்ருல் அந்த நாடு கொடிய பாலைவனம் போல் நெடிய துயரங்களை அடையும் என இளங்கோவடிகள் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். அரச குலக் கோன்றலான இப்புலவர் பெருமான் ஆட்சிமுறை களைக் காவியத்தில் நன்கு காட்சிப்படுத்தி நலம் புரிந்திருக்கிருர், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்ரும் ” (இளங்கோ) தனது அரசு முறையில் சிறிது பிழை செய்தாலும் அ ங் க அரசனைத் தருமதேவகை கொல்லும் என்று இங்கனம் சொல்லி யிருப்பதைக் கூர்ந்த சிந்திக்க வேண்டும். அரசு ஆளப்பிறந்த வன் கன் கருமத்தைக் கருத்தோடு செய்துவரும் அ ள ேவ கருமம் அவனைக் காத்து வருகிறது; அவ்வாறு செய்யாமல் பிழை செய்ய நேரின் அவனே விட்டுத் கருமம் விலகி விடுகிறது; விடவே அவன் அழிதுயரங்களை கெடிது அடைய சேர்கின்ருன். மனித சமுதாயம் இனிது வாழச் செய்வதே மன்னனது ஆட்சிக்கு மாட்சியாம்; யாகொரு அல்லலும் இல்லாமல் யாவ ரும் சுகமாய் எந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனரோ அந்த நாடே நீதி முறையான ஆட்சியை யுடையதாம். தன் குடிசனங் கள் மன அமைதியுடன் சமமாய் வாழ ஆள்பவன் நீதி மன்ன குய் நிலவி நிற்கின்ருன். நீதி முறை என்பது ஆதி பகவான் முறைபோல் துறைதோறும் கிமைபுரிந்துநெறிசெய்தருளுகிறது. ** Justice is effective coordination. ” (Plato) : நீதிமுறை யாவருக்கும் சமநிலையில் ஆதரவு செய்கிறது” என்னும் இது இங்கே அறியத்தக்கது. கன் கருமம் கருமமாய்த் தழைத்துவர ஆட்சி புரிபவன் இருமையும் பெருமை பெறுகி(ா?ன். தான் புரி கருமங்கள் தரும மாய் வர வான்புரி மதியுடன் வரைந்து செய்வதே கோன்புரி முறை; அது கோடி கின்றதேல் கான்புரி வேடய்ைக் கழிய நேர்வனே. இதனைக் கருதி உணர்ந்து உறுதி காண வேண்டும். 250

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/70&oldid=1327449" இலிருந்து மீள்விக்கப்பட்டது