பக்கம்:தரும தீபிகை 6.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1996 த ரும தீ பி. கை " அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது. " - - - - (சிலப்பதிகாரம், 28) மாதர் கற்பு மன்னர் முறையால் மன்னியுள்ளது என்னும் இது உன்னி யுணர வுரியது. ஆண்பாலும் பெண்பாலும் மாண் பாய் ஒழுகுவது விழுமிய ஆட்சியின் மாட்சியால் விளைவதாம். மனித சமுதாயம் புனித நிலையில் இனிது வாழ வேண்டு மால்ை நீதிமுறை தழுவி அரசன் நெறியே ஆள வேண்டும். மாந்தர் மகிழ்ந்து வாழ்ந்து வரச்செய்யின் அவ்வேந்தன் மனுவின் மனுவாய் உயர்ந்து வானும் வியந்து புகழ விளங்கி மகிழ்வான். 783 மனமொழி மெய் தீமை மருவாமல் பேணி இனனம் உயிர்கட் கிதமாய்த்-தனையறிந்து வாழ்வானே ஆலிைம் மண்ணும் உயர் விண்ணும் ஆள்வானே யாவன் அவன். (க) இ-ள் உள்ளம் உரை செயல்களில் யாதொரு துேம் சேராமல் உயிர்களுக்கு இதம் புரிந்து உண்மை உணர்வோடு வாழுகின்ற அரசன் வையமும் வானமும் ஒருங்கே ஆ ளு ம் அதிபதியாய் உயர்ந்த யாண்டும் துதிபெற்று விளங்குவான் என்க. பலவகை நிலைகளில் பி ரி து பரந்துள்ள மனித சமுதா யத்தை ஆள நேர்ந்த அரசன் புனித நிலையில் உயர்ந்திருக்க வேண்டும். தலைமை அதிபதி தகுதியாய் அமைக்க போதுதான் மக்கள் தக்க வழிகளில் ஒழுகி மிக்க கலன்களை அடைய நேர்வர். ෂ டி க்ள் பெருந்தகவுடன் பொருந்திச் சிறந்து வாழ்ந்து வருவது கோமகன் திருந்தி வாழ்வதால் விளைந்து வருகிறது. சேர்ந்த இனத்தின் படியே சீவர்கள் நேர்ந்து வருதலால் அரசனைச் சார்ந்த குடிகள் அவனுடைய இயல்பினை எ ப் ங் து இயங்குகின்றனர். மனம் தாயனப் மன்னன் மாநிலம் காத்துவ ரின் மாந்தர் இனம் தாயராப் இனிது வாழ்கின்றனர். அறிவு சீலங்கள் தி ை ,ൗ ங் த பெரியோர்களை உறவுரிமையாக் தழுவி அரசன் ஆட்சி புரிந்துவரின் அ.து விழுமிய மாட்சியாய் விளங்கி பாண்டும் வியன் பயன்களை விளைத்து எவ்வழியும் சிறந்து வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/73&oldid=1327452" இலிருந்து மீள்விக்கப்பட்டது