பக்கம்:தரும தீபிகை 6.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2004 த ரு ம தீ பி ைக தனது ஆளுகையில் வாழுகிற மாங்கர் நல்ல உறுதி ஊக்கங்கள் கோய்ந்து யாண்டும் உழைத்து உயர்ந்து வர வேந்தன் உதவி வர வேண்டும். உள்ளக் கிளர்ச்சியும் உற்சாகமும் மனிதனுக்கு அதிசய ஆற்றல்களை அருளுகின்றன; அந்த உ ய ர் நலங்களை அரசன் அயராமல் ஆகளித்துவரின் அவனது ஆ ட் சி என்றும் மாட்சியாய் உயர்ந்து மகிமைகள் பல நிறைந்து விளங்கும். 786 பொங்கோத ஞாலம் புகழ்ந்து மகிழ்ந்துவரச் செங்கோல் செலுத்தித் திசைஎங்கும்-மங்காத கீர்த்தி வளரக் கிளர்ந்து வரும்அரசே மூர்த்தி அரசுள் முதல். (க) இ-ள் கடல் சூழ்ந்த உலகம் உளம் உவந்து புகழ்ந்துவர நெறியே செங்கோலைச் செலுக்கிவரின் அந்த அரசு மங்காக கீர்த்தியுடை யதாய் எங்கும் முதன்மை எ ப்தி உயர்ந்து கிற்கும் என்க. தலைமையான அரசின் நிலைமையை இது உணர்த்துகின்றது. முன்பு புரிந்த புண்ணிய நிலையில் உயர்ந்து வந்துள்ள அரசன் அங்கிலமையை எண்ணி யுணர்ந்து தனக்கு கண்ணியுள்ள கரு மங்களைக் கருதிச் செய்து வருவது உறுதியான கடமையாய் வந்தது. எந்த மனிதனும் அவனுக்குச் சொங்கமாய் அமைந்த காரியக்கைக் கருதிச் செய்துவரின் க ரு ம வி ர ன ப் அவன் உயர்ந்து திகழ்கிருன். பெரியபலன்களும் நிறைந்தவருசின்றன. வினையாண்மை மனிதனே வியஞன நிலையில் உயர்த்துகின் மக. ஆண்மைக்கு மேன்மையாய் அமைந்துள்ள அரசன் ஆட் சியை நீதி முறையில் நெறியே செலுத்திவரின் அரிய பல செல் வங்களும் கீர்த்திகளும் அவனிடம் உரிமையோடு வந்து சேரு கின்றன. முறைமை செப்துவரும் அளவு இறைமை எ ப்துகிறது. இனிய பாதுகாவலான ஆட்சி முறை குடிகளுக்குச் சுக மான வாழ்வுகளை இயல்பா அருளுகின்றது. உ யிர் வாழ்வு துயர் நீங்கி உயர்கிறது. சீவர்கள் உவந்து வாழ்ந்து வரவே அங்கே தெய்வக் திருவருள் சுரங்து வருகிறது; வரவே அங்க மன்னனு டைய நாடு மன்னிய வளங்களோடு மகிமை மிகப் பெறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/81&oldid=1327460" இலிருந்து மீள்விக்கப்பட்டது